Home /News /entertainment /

கதை, திரைகதை வசனம் எழுதும் யோகிபாபு!

கதை, திரைகதை வசனம் எழுதும் யோகிபாபு!

கவுஷிக் ராமலிங்கம் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெயர் சூட்டப்படாத இப்படத்தை றெக்க, ஐங்கரன் படங்களை தயாரித்த பி.கணேஷ் தயாரிக்கிறார். மற்ற நடிகர்கள் முடிவாகாத நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை செப்டம்பர் மாதத்தில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
    தான் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார் யோகிபாபு.

    தமிழ்சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு, காமெடி ஜானரில் உருவாகும் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

    சமீபத்தில் யோகி பாபு நடித்த தர்மபிரபு படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் மே மாதம் திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து கூர்கா, ஜாம்பி உள்ளிட்ட படங்களிலும் யோகி பாபு நாயகனாக நடித்து வருகிறார்.

    இந்நிலையில், தற்போது தான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார். இது அவரது திரைத்துறை பயணத்தில் அடுத்த அவதாரமாக பார்க்கப்படுகிறது.

    இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது. இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்க, ராஜசேகர் இயக்குகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வரும் என்று தயாரிப்பு நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ஹீரோவாக ஒருசில படங்களில் நடித்து வந்தாலும் விஜய் 63, சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

    அவெஞ்சர்ஸ் ட்ரெய்லர் விழாவில் விஜய் சேதுபதி, ஏ.ஆர்.ரஹ்மான் சுவாரஸ்ய பேச்சு - வீடியோ

    சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actor Yogibabu

    அடுத்த செய்தி