விஜய் 63 படம் குறித்தும் தனது கதாபாத்திரம் பற்றியும் யோகி பாபு சில தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
தெறி, மெர்சல் படத்தை அடுத்து மூன்றாவது முறையாக விஜய் - அட்லீயுடன் கூட்டணி அமைத்துள்ளார். விஜய்யின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் படம் குறித்த சில தகவல்களை நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.
அதில், படம் முழுக்க தன்னுடைய கதாபாத்திரம் வருவது போன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும், ஏற்கெனெவே தெறி படத்தில் நடிக்க வேண்டிய வாய்ப்பைத் தவறவிட்டதால் அட்லீ இந்தப் படத்தில் தனக்கு வாய்ப்பளித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்தாக இந்தப் படம் அமையும் என்றும் உத்தரவாதம் அளித்துள்ளார்.
விஜய் அட்லீ மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றுவது போல, மெர்சல், சர்கார் ஆகிய படங்களுக்கு பிறகு 3-வது முறையாக விஜய்யுடன் யோகி பாபு நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மார்கெட் சரிவின் போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் ஹீரோயின்கள் - சிறப்பு வீடியோ
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.