Home /News /entertainment /

“அஜித், விஜய் ரெண்டு பேரையும் பிரித்துப்பார்க்க முடியல” நெகிழும் யோகிபாபு

“அஜித், விஜய் ரெண்டு பேரையும் பிரித்துப்பார்க்க முடியல” நெகிழும் யோகிபாபு

யோகி பாபு (கோப்புப்படம்)

யோகி பாபு (கோப்புப்படம்)

விவேகம் படத்தில் அஜித் குமார் உடனும், சர்கார் படத்தில் விஜய் உடனும் யோகி பாபு நடித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
“அஜித், விஜய் ரெண்டு பேர்கிட்டேயும் நிறைய அனுபவங்கள் இருக்கு. ரெண்டு பேருமே எனக்கு ஒன்றுதான்” என்று காமெடி நடிகர் யோகி பாபு கூறியுள்ளார்.

காமெடி நடிகர் யோகி பாபுவுக்கு தற்போது சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. சுருள் முடி, டைமிங் டயலாக் என்று ரசிகர்களை தனது நடிப்பால் அவர் ஈர்த்து வருகிறார். விவேகம் படத்தில் அஜித் குமார் உடனும், சர்கார் படத்தில் விஜய் உடனும் யோகி பாபு நடித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “அஜித், விஜய் இவங்க ரெண்டுபேருமே எனக்கு ஒன்றுதான். பிரித்துப்பார்க்கப் பிடிக்கலை. இரண்டு பேர்கிட்டேயும் நிறைய அனுபவங்கள் இருக்கு. நான் ரொம்ப சின்ன நடிகர். ஆனால் இரண்டு பேருமே என்னைப் பக்கத்துல கூப்பிட்டு உட்கார வைத்து அழகு பார்த்தார்கள்.

நடிகர் அஜித் குமார்


விஜய் சார்கூட நடிக்கிறப்போ, நான் அவரைக் கலாய்த்து ஏதாவது வசனம் பேசினால் அதை மனசார ஏற்றுக்கொண்டு சிரிக்கிறார். விஸ்வாசம் படத்துல அஜித் சார்கூட நடிக்கிறப்போ, அவரை கலாய்த்து ஒரு வசனம். பேசுறதுக்கு முன்னாடி அவர்கிட்ட ‘அண்ணே... பேசட்டுமா?’ன்னு தயங்கிக் கேட்டேன்.

நடிகர் விஜய்


அதுக்கு, ‘என்ன யோகி பாபு இப்படிக் கேட்குறீங்க... இது உங்க வேலை, பேசுங்க’ன்னு சொன்னார். இப்படிப் பேசுனதுலேயே, எனக்கு தயக்கம் போய், தைரியம் வந்துடுச்சு”என்று கூறியுள்ளார்.

Also See..

Published by:Sankar
First published:

Tags: Actor Yogibabu

அடுத்த செய்தி