நடிகர் யோகி பாபு தனது கனவு கதாபாத்திரம் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்று பிரபலமாகி வரும் காமெடி நடிகர் யோகிபாபு, கோலமாவு கோகிலா படத்தின் வெற்றிக்கு பின் 'மோஸ்ட் வான்டட்' நடிகராக மாறிவிட்டார். ரஜினிகாந்த், அஜித், விஜய், உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் யோகி பாபு தர்ம பிரபு, கூர்கா உள்ளிட்ட ஒருசில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற தர்மபிரபு பட இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய யோகி பாபு, நான் லொள்ளு சபாவில் இருக்கும் போது ரூ.300 சம்பளமாக வாங்கியிருக்கிறேன். சில நாட்கள் சம்பளமே இல்லாமல் மொட்டை மாடியில் சாப்பிடாமல் படுத்திருக்கிறோம். ஆனால் தற்போது நான் ஒருநாள் சம்பளமாக ரூ. 10 லட்சம், ரூ. 15 லட்சம் வாங்குவதாக பேசுகின்றனர். நான் ரூ.10, 15 லட்சம் எல்லாம் சம்பளம் கேட்கவில்லை. நான் ரூ.2000, ரூ.3000 சம்பளத்துக்கு வந்தவன் நான். அனைத்து தயாரிப்பாளர்களின் கஷ்டம் தெரிந்தவன்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தனது கதாபாத்திரம் குறித்து பேட்டி ஒன்றில் பதிலளித்திருக்கும் அவர், 'ஒண்ணா இருக்க கத்துக்கணும்' படத்தில் கவுண்டமணி நடித்த கேரக்டர் போல் ஒரு கேரக்டரில் தான் நடிக்க விரும்புவதாகவும், அதுதான் தனது கனவு ரோல் என்றும், அதுபோன்ற ஒரு கேரக்டர் கிடைத்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
'ஒண்ணா இருக்க கத்துக்கணும்' படத்தில் கவுண்டமணி சுடுகாட்டில் வேலை செய்பவராக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ பார்க்க: யூடியூப் சென்சேஷனலாக உருவெடுத்துள்ள நடிகை சாய் பல்லவி!
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.