யார் என்ன சொன்னாலும் இந்திய நாட்டில் பக்தி என்பது குறையவே குறையாது: நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன்

Actor YG Mahendran

நடிகர் ஒய் ஜி மகேந்திரன், தனது நண்பரும் மாநாடு படத்தின் தயாரிப்பாளருமான சுரேஷ் உடன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு  வந்திருந்தார்.

 • Share this:
  யார் என்ன சொன்னாலும் இந்திய நாட்டில் பக்தி என்பது குறையவே குறையாது, கடவுள் கிருபையால் பக்தி மேலும் மேலும் வளரும் அனைத்து பிரச்சனைகளும் தீரும் என காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த திரைப்பட நடிகர் ஒய் ஜி மகேந்திரன் தெரிவித்தார்.

  உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தை ஒட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.

  ஆடி மாதத்தை ஒட்டி நடைபெறும் சிறப்பு அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்ய திரைப்பட நடிகர் ஒய் ஜி மகேந்திரன், தனது நண்பரும் மாநாடு படத்தின் தயாரிப்பாளருமான சுரேஷ் உடன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு  வந்திருந்தார்.

  Also Read:  அலைபாயுதே பட பாணியில் காதல் திருமணம்.. மாமியார் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா!

  காமாட்சி அம்மன் ஆலயத்தில் இருவரும் சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திரைப்பட நடிகர் ஒய் ஜி மகேந்திரன்,  “உலக நன்மைக்காகவும், கூடிய சீக்கிரம் நம்மை சுற்றி இருக்கும் கொரோனா என்ற நோய் தொல்லை ஒழிந்து எல்லோரும் சாதாரண நிலைக்கு வர வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டுதல்.

  Also read:  திருச்சியில் முதல்முறையாக சிறுத்தை தாக்குதல் - செல்ஃபி எடுக்க முயன்றவருக்கு அதிர்ச்சி!

  நடிகர்களாக இருக்கட்டும், தொழிலதிபர்களாக இருக்கட்டும், பாமர மக்களாக இருக்கட்டும், எல்லோருமே என்ன செய்வது என்று தெரியாமல் கொஞ்சம் வெறுத்துப் போயிருக்கிறார்கள்,  அதெல்லாம் பக்தி, கடவுள் அருள் இருந்தால் தான் நீங்கும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  யார் என்ன சொன்னாலும் இந்த நாட்டில் என்றைக்கும், அதுவும் இந்திய திருநாட்டில் பக்தி என்பது குறையவே குறையாது. அந்த பக்தி மேலும் மேலும் வளரும். கடவுள் கிருபையால் எல்லாம் நல்லபடியாக ஆகும் என்பது என்னுடைய நம்பிக்கை என்றும்முக்கியமாக உலக நன்மைக்காக வேண்டிக் கொள்வதற்காகவே காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு வந்ததாகவும் திரைப்பட நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் தெரிவித்தார்.

  சந்திரசேகரன், செய்தியாளர் - காஞ்சிபுரம்
  Published by:Arun
  First published: