தயவு செய்து அவர் பெயரை பயன்படுத்தாதீர்கள்... மீம் கிரியேட்டர்களுக்கு விவேக் வேண்டுகோள்

நடிகர் விவேக்

தனது சமூக வலைதள பதிவில் மீம் கிரியேட்டர்களுக்கு நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 • Share this:
  கொரோனா காலத்தில் வெளியாகும் செய்திகள், முக்கிய அறிவிப்புகளை நகைச்சுவை மீம்ஸ்களாக உருவாக்கி மகிழ்கின்றனர் மீம்ஸ் கிரியேட்டர்கள்.

  சமீபத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்ற அறிவிப்பு வெளியான போது 12-வது மற்றும் கல்லூரி மாணவர்களின் மனநிலையை பிரதிபலிப்பது போன்ற நகைச்சுவையான மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் அதிக கவனம் பெற்றன.

  கொரோனா காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க இந்த மீம்களைப் பார்த்தால் வாய்விட்டு சிரித்து மகிழலாம் என்றே கூறலாம். இந்நிலையில் சில மீம்ஸ் கிரியேட்டர்கள் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் புகைப்படத்தை வைத்து மீம் உருவாக்கியுள்ளனர். அதைப்பார்த்த நடிகர் விவேக், “தயவு செய்து, நாம் மிகவும் மதிக்கும் கலாம் ஐயாவின் படத்தை எந்த மீம்ஸ்களிலும் கிண்டலாக பயன்படுத்த வேண்டாம் என்று அனைத்து மீம் கிரியேட்டர்களையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் விவேக், தன்னை வைத்து உருவாக்கப்படும் மீம்ஸ்களைப் பார்த்து ரசித்திருக்கிறார். அதேபோல் வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை என்று அவர் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க: பாரதி கண்ணம்மா வெண்பாவின் கலக்கல் க்ளிக்ஸ்

  Published by:Sheik Hanifah
  First published: