காலமெல்லாம் களம்கண்ட ஆலமரம் சற்றுமுன் சாய்ந்ததம்மா!..டாக்டர் சாந்தா மறைவிற்கு நடிகர் விவேக் இரங்கல்
காலமெல்லாம் களம்கண்ட ஆலமரம் சற்றுமுன் சாய்ந்ததம்மா!. என டாக்டர் சாந்தா மறைவிற்கு நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

டாக்டர் சாந்தா
- News18 Tamil
- Last Updated: January 19, 2021, 9:11 AM IST
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும், சமூக சேவகருமான மருத்துவர் வி.சாந்தா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 93. இதய நோய்க்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடல் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தன்னமலற்ற சேவைக்காக மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது என ஏராளமான விருதுகளை பெற்றவர் சாந்தா. தான் விருதுகள் மூலம் கிடைக்கும் பணம் முழுவதையும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வளர்ச்சிக்கே இவர் செலவு செய்தார்.
மருத்துவர் சாந்தா தன் வாழ்நாள் முழுவதையும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணிக்கு ஓய்வின்றி அர்ப்பணிப்புடன் பணியாற்றி மக்களின் அன்பை பெற்றவர். இவரது மறைவிற்கு நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், தன் வாழ் நாள் முழுவதையும் புற்று நோய் நோயாளிகளின் நலனுக்காகவே அர்ப்பணித்த பத்மவிபூஷன் சாந்தா அம்மையார் வாழ்வு 94ஆவது அகவையில் நிறைவுற்றது. தன்னலமற்ற வாழ்க்கைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
பற்றற்ற வாழ்வு வாழ்ந்து- பாழும் புற்றுநோய்க்கு ஓர் முற்று வைக்க காலமெல்லாம் களம்கண்ட ஆலமரம் சற்றுமுன் சாய்ந்ததம்மா! சாந்தா அம்மா! நீ சரித்திரம் அம்மா!! என பதிவிட்டுள்ளார்.
அடையாறு மருத்துவமனையை உலகத் தரம்வாய்ந்த, புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றுவதில் பெரும் பங்கு ஆற்றினார். உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்த சாந்தா, இந்திய வேளாண் ஆய்வுக்கழக குழுவின் உறுப்பினராகவும், அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினாகவும், இந்திய புற்றுநோயியல் கழகத் தலைவராகவும் இருந்து சிறப்பான முறையில் பணியாற்றியுள்ளார்.
தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் புற்றுநோய் தொடர்பாக ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார் மருத்துவர் சாந்தா. புற்றுநோய்க்கு புதிய மருந்துகள் அல்லது புதிய மருத்துவ முறைகள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டாலும், அதனை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அறிமுகம் செய்வதை கடமையாகக் கொண்டிருந்தவர் மருத்துவர் சாந்தா. நோயாளிகளுக்கு தாயாக இருந்து பணியாற்றிவரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
தன்னமலற்ற சேவைக்காக மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது என ஏராளமான விருதுகளை பெற்றவர் சாந்தா. தான் விருதுகள் மூலம் கிடைக்கும் பணம் முழுவதையும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வளர்ச்சிக்கே இவர் செலவு செய்தார்.
மருத்துவர் சாந்தா தன் வாழ்நாள் முழுவதையும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணிக்கு ஓய்வின்றி அர்ப்பணிப்புடன் பணியாற்றி மக்களின் அன்பை பெற்றவர். இவரது மறைவிற்கு நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில்,
பற்றற்ற வாழ்வு வாழ்ந்து- பாழும் புற்றுநோய்க்கு ஓர் முற்று வைக்க காலமெல்லாம் களம்கண்ட ஆலமரம் சற்றுமுன் சாய்ந்ததம்மா! சாந்தா அம்மா! நீ சரித்திரம் அம்மா!! என பதிவிட்டுள்ளார்.
பற்றற்ற வாழ்வு வாழ்ந்து- பாழும்
புற்றுநோய்க்கு ஓர் முற்று வைக்க
காலமெல்லாம் களம்கண்ட ஆலமரம்
சற்றுமுன் சாய்ந்ததம்மா! சாந்தா அம்மா!
நீ சரித்திரம் அம்மா!!🙏🏼😭😭🙏🏼 pic.twitter.com/IHXhAUepte
— Vivekh actor (@Actor_Vivek) January 19, 2021
தன் வாழ் நாள் முழுவதையும் புற்று நோய் நோயாளிகளின் நலனுக்காகவே அர்ப்பணித்த பத்மவிபூஷன் சாந்தா அம்மையார் வாழ்வு 94ஆவது அகவையில் நிறைவுற்றது. தன்னலமற்ற வாழ்க்கைக்கு ஓர் எடுத்துக்காட்டு🙏🏼😭 pic.twitter.com/0lLe9CHSx6