Home /News /entertainment /

யோகி பாபுவை அடுத்து ‘விஜய் 63’ படத்தில் இணைந்த காமெடி பிரபலம்

யோகி பாபுவை அடுத்து ‘விஜய் 63’ படத்தில் இணைந்த காமெடி பிரபலம்

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாக இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.

  • News18
  • Last Updated :
நடிகர் விஜய்யின் 63-வது படத்தில் நடிகர் விவேக் இணைந்துள்ளார். இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சர்கார் படத்தை அடுத்து விஜய், இயக்குநர் அட்லியுடன் 3 -வது முறையாக கூட்டணி அமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கபட்டுள்ளன. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அதேபோல் சிம்டாங்காரன் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார். மெர்சல் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஜி.கே.விஷ்ணு இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்தப் படம் 2019-ம் ஆண்டின் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாக இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நேருக்கு நேர், குஷி, பிரியமானவளே, பத்ரி, உள்ளிட்ட 11 படங்களில் நடிகர் விஜய்யுடன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த விவேக் நடிக்கிறார். இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.



முன்னதாக இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபு இணைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆரின் சண்டை முதல் விஜய்யின் சண்டை வரை - ஜாகுவார் தங்கத்தின் அனுபவம் - வீடியோ

Published by:Sheik Hanifah
First published:

Tags: Actor vijay, Actor vivek, Actor Yogibabu

அடுத்த செய்தி