Home /News /entertainment /

கமல்ஹாசன் பாணியில் களமிறங்கும் விஷால்!

கமல்ஹாசன் பாணியில் களமிறங்கும் விஷால்!

விஷால்

விஷால்

  • News18
  • Last Updated :
    கமல்ஹாசன் பாணியில் நடிகர் விஷாலும் டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார். அதற்கான புரமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது

    பாலிவுட்டில் உச்சநட்சத்திரமாக இருக்கும் அமிதாப்பச்சன், ஷாரூக் கான், சல்மான், கான், அமீர் கான் ஆகியோர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது இந்தியில் வழக்கமான ஒன்றாகிவிட்டது. ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சிலர் மட்டுமே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளனர். அதில் நடிகர் சரத்குமார், சூர்யா, அரவிந்த் சாமி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசனும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.

    நடிகர் கமல்ஹாசனைத் தொடர்ந்து நடிகர் விஷாலும் விரைவில் தொலைக்காட்சி தொடர் ஒன்றை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தத் தகவல் தற்போது வெளியாகியிருக்கும் புரமோவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சன் டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ள நிகழ்ச்சியின் வீடியோவை அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் நடித்துள்ள விஷால், ``விதைச்சவன் தூங்கலாம் விதைகள் தூங்காது. அன்பை விதைப்போம்” என்று வசனம் பேசியுள்ளார். இது எவ்வகை நிகழ்ச்சி என்று இனிமேல்தான் தெரியவரும்.

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actor vishal, Bigg Boss, TV show

    அடுத்த செய்தி