• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • துப்பறிவாளன் 2-ம் பாகத்தில் புதுமுகம் ஹீரோயினாக தேர்வு!

துப்பறிவாளன் 2-ம் பாகத்தில் புதுமுகம் ஹீரோயினாக தேர்வு!

மிஷ்கின் இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக இப்படத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்தின் Bristol பகுதியில் நாற்பது நாட்களுக்கு நடைபெறுகிறது.இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்

மிஷ்கின் இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக இப்படத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்தின் Bristol பகுதியில் நாற்பது நாட்களுக்கு நடைபெறுகிறது.இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்

  • News18
  • Last Updated :
  • Share this:
    துப்பறிவாளன் படத்தின் 2-ம் பாகத்தின் நாயகி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம் துப்பறிவாளன். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆன்ட்ரியா, வினய் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்தில் விஷாலின் கணியன் பூங்குன்றன் என்ற கதாபாத்திரம் பலரால் பேசப்பட்டது.

    முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் மிஷ்கின். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் லண்டனில் தொடங்கி தொடர்ந்து அங்கேயே 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிகிறது.

    முதல் பாகத்துக்கு அரோல் கொரோலி இசையமைத்திருந்த நிலையில் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.



    இந்நிலையில் இந்தப் படத்தில் நாயகியாக மதுராவைச் சேர்ந்த லவ்லி சிங் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



    மேலும் முதல் பாகத்தில் நடித்த பிரசன்னாவும் 2-ம் பாகத்தில் நடிக்க உள்ளார்.

    வீடியோ பார்க்க: பிரபல நடிகையின் கணவர் தூக்கிட்டு தற்கொலை

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: