• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை...! ‘துப்பறிவாளன் 2’ பற்றி மௌனம் கலைத்த விஷால்!

இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை...! ‘துப்பறிவாளன் 2’ பற்றி மௌனம் கலைத்த விஷால்!

நடிகர் விஷால்

நடிகர் விஷால்

  • Share this:
    ‘துப்பறிவாளன் 2’ படத்தை இயக்குவேன் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் இருந்தாலும் தான் உற்சாகத்துடன் இருப்பதாகவும் விஷால் தெரிவித்துள்ளார்.

    மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம் துப்பறிவாளன். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆன்ட்ரியா, வினய் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்தில் விஷாலின் கணியன் பூங்குன்றன் என்ற கதாபாத்திரம் பலரால் பேசப்பட்டது.

    முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் படக்குழு ஈடுபட்டது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் துவங்கி நடைபெற்று வந்தது. இதில் விஷாலுடன் பிரசன்னா, கெளதமி, ரகுமான், அஷ்யா உள்ளிட்டோர் நடிக்க இளையராஜா படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமானார்.

    இந்தப் படத்தின் பட்ஜெட் அதிகமானதால் திட்டமிட்ட பட்ஜெட்டை விட அதிக பொருட் செலவில் படத்தை இயக்கி வரும் மிஷ்கினை படத்திலிருந்து நீக்கி விட்டு நடிகரும் தயாரிப்பாளருமான விஷாலே எஞ்சியுள்ள திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது.



    இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் விஷால், இத்தகவல் உண்மைதான் என்று கூறியுள்ளார். படத்திலிருந்து தான் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து பேட்டியளித்திருக்கும் மிஷ்கின், “துப்பறிவாளன் 2 படத்துக்காக ரூ.40 கோடி கேட்கவில்லை. ரூ.400 கோடி கேட்டேன். 50 சதவிகித படப்பிடிப்பை ரூ.100 கோடியில் முடித்திருக்கிறேன். மீதமிருக்கும் படப்பிடிப்பை முடிக்க ரூ.100 கோடி தேவைப்படுகிறது.

    படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஷால் சேட்டிலைட்டிலிருந்து குதிப்பது போல் காட்சிகளை அமைக்க திட்டமிட்டிருந்தேன். அதற்கு மட்டும் ரூ.100 கோடி செலவாகும். எனவே மொத்தம் விஷாலிடம் ரூ.400 கோடி கேட்டன் என தனது பாணியில் கிண்டலாக பதிலளித்திருந்தார்.

    இந்நிலையில் இயக்குநர் அவதாரம் எடுக்கும் நடிகர் விஷால் இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, “‘துப்பறிவாளன் 2’ படத்தை இயக்குவதை ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்றாக கருதுகிறேன். இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் நான் உற்சாகமாக இருக்கிறேன்.

    இயக்குநர் தான் ஒரு படத்தை தலைமை ஏற்று (கேப்டன் ஆஃப் தி ஷிப்) வழி நடத்துகிறார். அந்த விதத்தில் பொறுப்புகளும் எனக்கு நிறைய உள்ளன. படத்தொகுப்பு, இசை, பின்னணி இசை என எல்லாத் துறைகளிலும் அவதாரம் எடுப்பது சிறப்பான அனுபவமாக கருதுகிறேன். அதற்காக காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்

    மேலும் விஷால் கூறுகையில், விலங்குகள் தொடர்பான கதையை அடுத்த ஆண்டு இயக்க திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தார். ஆனால் அதற்கு முன்பாகவே ‘துப்பறிவாளன் 2’ திரைப்படம் அவரை அறிமுக இயக்குநராக்கியுள்ளது.

    மேலும் படிக்க: வதந்திகளை நம்ப வேண்டாம்... ஆர்.சுந்தர்ராஜன் நலமுடன் உள்ளார்...! மகன் விளக்கம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: