• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Enemy Movie Teaser: எனிமி டீஸர் வெளியீட்டு தேதியை அறிவித்த விஷால்..

Enemy Movie Teaser: எனிமி டீஸர் வெளியீட்டு தேதியை அறிவித்த விஷால்..

எனிமி திரைப்படம்

எனிமி திரைப்படம்

எனிமி படத்தின் டீஸர் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என விஷால் அறிவித்துள்ளார்.

  • Share this:
    அவன் இவன் படத்துக்குப் பிறகு விஷால், ஆர்யா இணைந்து நடித்திருக்கும் படம், எனிமி. ஆக்ஷன் படமான இதில் நாயகியகளாக மம்தா மோகன்தாஸ், மிருணாளினி நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார்.

    அரிமா நம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் எனிமியை இயக்கியுள்ளார். இதன் பேட்வொர்க் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது. விஷால் அதில் கலந்து கொண்டார். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படத்தின் டீஸரை நாளை மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக விஷால் அறிவித்துள்ளார்.



    விஷால் தொடர்ச்சியாக நடித்துவந்த ஆக்ஷன் படங்கள் சரிவரப் போகவில்லை. தொடர் தோல்விகள். அதற்கு எனிமி என்ட் கார்ட் போடும் என்பது விஷால் மற்றும் அவரது ரசிகர்களின் நம்பிக்கை. ஆர்யாவின்  சார்பட்டா வெற்றி எனிமிக்கு தனி மைலேஜை தரும் என்பது பலரது நம்பிக்கை


    Also Read: கருப்பு நிற உடையில் சொக்க வைக்கும் நிதி அகர்வால்- போட்டோஸ்

    மினி ஸ்டுடியோஸ் வினோத் குமார் படத்தை தயாரித்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு. எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: