ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மிஷ்கினுடன் மீண்டும் இணையும் விஷால்... உறுதியானது துப்பறிவாளன் 2...!

மிஷ்கினுடன் மீண்டும் இணையும் விஷால்... உறுதியானது துப்பறிவாளன் 2...!

விஷாலுடன் மிஷ்கின் மற்றும் சுந்தர்.சி

விஷாலுடன் மிஷ்கின் மற்றும் சுந்தர்.சி

துப்பறிவாளன் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று லாபத்தை ஈட்டித் தந்தது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  துப்பறிவாளன் படத்தின் 2-ம் பாகம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  கடந்த 2017-ம் ஆண்டில் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் வெளியானது. க்ரைம் திரில்லராக உருவான இந்தப் படத்தில் வினய், பிரசன்னா, ஆன்ட்ரியா, அனு இம்மானுவேல், சிம்ரன், கே.பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

  விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக இந்தப் படத்தை விஷால் தயாரித்திருந்தார். படத்துக்கு அரோல் கரோலி இசையமைத்திருந்தார். படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று லாபத்தை ஈட்டித் தந்தது.

  தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உறுதியாகியுள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் துருக்கியில் படப்பிடிப்பில் இருக்கும் விஷாலை நேரில் சந்தித்த மிஷ்கின் படத்தின் கதையைக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து துப்பறிவாளன் 2 விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  விஜய் தயாரிக்கும் முதல் படம்... ஹீரோயினாகும் வாணி போஜன்...!


  சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Actor vishal, Director mysskin, Thupparivalan 2