சிந்து - வினோத் வளைக்காப்பு நிகழ்ச்சி! நிஷா, ரியோ உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் வாழ்த்து

சிந்து - வினோத் வளைக்காப்பு நிகழ்ச்சி

பிரியங்கா - தர்ஷன் தொகுத்து வழங்கும் காமெடி ராஜா, கலக்கல் ராணி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக வினோத் பாபு கலந்து கொண்டுள்ளார்.

  • Share this:
சின்னத்திரை நடிகரான வினோத் - சிந்து தம்பதியினருக்கு நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் விஜய் டீவி நட்சத்திரங்களான நிஷா, ரியோ உள்ளிட்டோர் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.

’தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் வினோத் பாபுவுக்கும் - சிந்துவுக்கும் கடந்த ஆண்டு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் புடைசூழ திருமணம் நடைபெற்றது. கொரோனா காலத்தில் நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தினர். இதன்பின்னர், இவர்கள் இருவரும் ஜோடியாக விஜய் டீவியில் ஒளிபரப்பான ‘Mr & Mrs சின்னத்திரையில் கலந்து கொண்டு கோப்பையையும் கைப்பற்றி அசத்தினர்.

இந்நிலையில், அண்மையில் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்ட வினோத் பாபு, அந்த இனிப்பான செய்தியை பகிர்ந்து கொண்டார். அதாவது, தனது மனைவி தாய்மை அடைந்திருப்பதாகவும், விரைவில் தங்கள் குடும்பம் வளரப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.

 

  
View this post on Instagram

 

A post shared by Raghu.V (@raghunorulez)


 

 

தற்போது அவர்களுக்கு வளைக்காப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் விஜய் டீவி பிரபலங்களான ரியோ, நிஷா, ஷர்மிளா, பிரனிகா, தீபா, ஐஸ்வர்யா உள்ளிட்ட ஒரு பட்டாளமே நேரில் சென்று வாழ்த்தியுள்ளது.

ALSO READ |  ராமநாதபுரம் டூ சென்னை.. சீரியலில் மட்டுமில்லை நிஜத்திலும் ஜெனிக்கு நிறைவேறாத ஆசைகள் ஏராளம்!

வினோத் பாபு - சிந்து தம்பதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நடிகை தீபா, ‘வளைக்காப்பு, சீக்கிரமா பாப்பா பொறக்கப்போகிறது, God Bless You Chellams’ என வாழ்த்தியுள்ளார்.

 

  
View this post on Instagram

 

A post shared by Deepa Deepa (@deepa15081990)


 

  
View this post on Instagram

 

A post shared by Raghu.V (@raghunorulez)


 

நிஷா போட்டிருக்கும் பதிவில், “அன்பு தம்பி வினோத் மனைவி சிந்துவின் வளைகாப்பு விழா, சுகப்பிரசவம் குழந்தை பிறப்பதற்கும், தாயும் சேயும் நலமாக இருப்பதற்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என தன்னுடைய வாழ்த்தை பதிவு செய்துள்ளார்.

ALSO READ |  கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தைப் போக்கும் பிரபல நடிகர் - ரசிகர்கள் நெகிழ்ச்சி!

இதேபோல் நடிகை பிரணிகா உள்ளிட்டோரும் வினோத் பாபு தம்பதியுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு வாழ்த்துகளை கூறியுள்ளனர். இருவருக்கும் நவம்பர் மாதம் குழந்தை பிறக்கும் என கூறப்படுகிறது. வினோத் பாபு, பிரபல காமெடி ஷோவான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விஜய் டீவியில் நுழைந்தார். பின்னர், சுந்தரி நீயும், சுந்தரன் நானும் சீரியலில் நடித்து பிரபலமான அவர், தற்போது தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற புத்தம் புதிய சீரியலில் கதாநாயகனாக நடிக்கிறார்.

 
 

பிரியங்கா - தர்ஷன் தொகுத்து வழங்கும் காமெடி ராஜா, கலக்கல் ராணி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக வினோத் பாபு கலந்து கொண்டுள்ளார். காமெடி, நடனம் என பன்முகத் திறமையாளரான அவர், கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியலின் முதல் புரோமோ மிகப்பெரிய சர்ச்சையாக மாறினாலும், வினோத் பாபுவுக்கு அது மிகப்பெரிய ரீச்சாக மாறியது.

 

  
View this post on Instagram

 

A post shared by Aranthai Nisha (@aranthainisha)


 

  
View this post on Instagram

 

A post shared by Deepa Deepa (@deepa15081990)


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published: