• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சிவாஜி - கமல்ஹாசன் சாதனையை ஓவர் டேக் செய்கிறாரா சீயான் விக்ரம்?

சிவாஜி - கமல்ஹாசன் சாதனையை ஓவர் டேக் செய்கிறாரா சீயான் விக்ரம்?

விக்ரமின் கோப்ரா

விக்ரமின் கோப்ரா

  • Share this:
    கோப்ரா படத்தின் மூலம் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் சாதனையை முறியடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கடாரம்கொண்டான் படத்தை அடுத்து விக்ரம் நடிக்கும் 58-வது படத்தை இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

    இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக 'கே.ஜி.எஃப்' புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி வரும் இந்தப் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிகராக அறிமுகமாகிறார்.

    இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிட்ட படக்குழு, வரும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் 10-க்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

    முன்னதாக சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான நவராத்திரி படத்தில் 9 வித்தியாசமான கேரக்டரில் அவர் நடித்திருப்பார். சிவாஜி கணேசனின் இச்சாதனையை தசாவதாரம் திரைப்படத்தில் 10 கேரக்டர்களில் நடித்து முறியடித்திருந்தார் கமல்ஹாசன். இருவரின் சாதனையையும் நடிகர் சியான் விக்ரம் கோப்ரா திரைப்படத்தில் முறியடிப்பாரா பொறுத்திருந்து பார்க்கலாம்.

    மேலும் பார்க்க: சீரியல் நடிகையாகிறார் தொகுப்பாளினி மணிமேகலை!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: