• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ‘சர்கார்’ படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்த விஜயின் மனைவி

‘சர்கார்’ படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்த விஜயின் மனைவி

நடிகர் விஜயின் மனைவி சங்கீதா

நடிகர் விஜயின் மனைவி சங்கீதா

நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தை ரசிகர்களுடன் அவரின் மனைவி சங்கீதா கண்டுகளித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 3- வது முறையாக உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அரசியல் படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் ராதாரவி வில்லன் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். படத்தின் அறிவிப்பு வெளியான நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வந்தது. இந்நிலையில் படம் வெளியான இன்று முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்கள் கொண்டாட்ட மன நிலையில் கண்டுகளித்தனர். மேள தாளங்கள் முழங்க பாலாபிஷேகத்துடன் சர்கார் தீபாவளியை விஜய் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

    இந்நிலையில் நடிகர் விஜயின் மனைவி சங்கீதா சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் ‘சர்கார்’ படத்தை கண்டுகளித்தார். அவருடன் இயக்குநர் அட்லி மற்றும் அவரது குடும்பத்தினரும் படத்தைக் காண வந்திருந்தனர். அவர்களுடன் வரலட்சுமி சரத்குமாரும் படத்தை ரசிகர்களுடன் கண்டுகளித்திருக்கிறார். இச்செய்தியை வெற்றி திரையரங்கின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் கௌதமன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருப்பதோடு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.



    மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றியை தக்கவைத்திருப்பதாக படத்தைப் பார்த்த ரசிகர்கள் கூறுகின்றனர். இந்தப் படம் ஒவ்வொருவரும் வாக்கு செலுத்த வேண்டிய அவசியத்தை பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    வனவிலங்குகளுக்காக பட்டாசு இல்லாமல் தீபாவளி கொண்டாடும் மலை கிராமம் - வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: