முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வனிதா மீது மீண்டும் காவல்நிலையத்தில் புகார் அளித்த விஜயகுமார்

வனிதா மீது மீண்டும் காவல்நிலையத்தில் புகார் அளித்த விஜயகுமார்

விஜயகுமாரும் வனிதாவும்

விஜயகுமாரும் வனிதாவும்

  • Last Updated :

தனது மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் விஜயகுமார் மதுரவாயல் அருகே உள்ள ஆலப்பாக்கத்தில் வசித்து வருகிறார். அவருக்கும் அவரது மகள் வனிதாவிற்கும் இடையே வீட்டின் உரிமை தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்தப் பிரச்னை காரணமாக தனது மகள் வனிதா மீது மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் தனது மகள் வனிதா வீட்டை படப்பிடிப்புக்காக வாடகைக்கு கேட்டதாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் அவருக்கு வீட்டை வாடகைக்கு விட்டதாகவும், ஆனால் தற்போது வரை வீட்டை காலி செய்யாமல் அவரது வீடு என்று கூறி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கிடையே கடந்த சில ஆண்டுகளாகவே பிரச்னை இருந்து வந்தது. அப்போது தனது பெற்றோர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தார். இந்நிலையில் மீண்டும் அப்பா-மகளுக்கிடையேயான மோதல் தொடங்கியுள்ளது.

top videos
    First published:

    Tags: Actor Vijayakumar, Police complaint, Vanitha