சர்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம்... நடிகர் விஜயை சாடிய அமைச்சர்

அமைச்சர் கடம்பூர் ராஜூ | நடிகர் விஜய்

ஸ்டார் வேல்யூ என்று கூறும் நடிகர்கள் திரையரங்கில் அதிக கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று அறிக்கை வெளியிட வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஸ்டார் வேல்யூ என்று கூறும் நடிகர்கள் திரையரங்கில் அதிக கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று அறிக்கை வெளியிட வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

  நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில் படத்தின் டிக்கெட்டுகள் ரூ.500 முதல் ரூ. 1000 வரை விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த மகேந்திரபாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம், மதுரையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் தியேட்டர் உரிமத்தை ரத்து செய்யலாம், 'சர்கார்' படம் வெளியாக உள்ள தியேட்டர்களில் கட்டணம் பற்றி தணிக்கைக்குழு ஆய்வு செய்யவேண்டும் என்று உததரவிட்டுள்ளது.

  நீதிபதிகள் டி.ராஜா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் இந்த விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  இதையடுத்து கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, “பண்டிகை காலங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுக்க அரசு பல்வேறு  நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பெரிய பட்ஜெட், ஸ்டார் வேல்யூ என்ற காரணம் காட்டி தீபாவளிக்கு வெளியாகும் யார் திரைப்படமாக இருந்தாலும் அதிக கட்டணம் வசூல் செய்தால் அந்த திரையரங்கு உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசும் அறிவித்துள்ளது. நீதிமன்றமும் தெரிவித்துள்ளது. ஸ்டார் வேல்யூ என்று கூறும் நடிகர்கள் அதிக கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று அறிக்கை வெளியிட வேண்டும்” என்றார்.
  Published by:Sheik Hanifah
  First published: