Home /News /entertainment /

ஏழு தமிழர் விடுதலை: ஆளுநருக்கு விஜய் சேதுபதி ட்வீட்!

ஏழு தமிழர் விடுதலை: ஆளுநருக்கு விஜய் சேதுபதி ட்வீட்!

நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி

எழுவர் விடுதலை என்பது தமிழர்களின் பிரச்சனை மட்டுமல்ல. இது ஒரு மனித உரிமை பிரச்சனை. இத்தனை வருடங்கள் அவர்களை சிறையில் அடைத்து வைத்திருந்ததே போதும். அவர்களின் விடுதலை குறித்து ஆளுநர் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்றும் விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :
    பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து தமிழக ஆளுநருக்கு ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

    பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவுசெய்து கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை கூட்டப்பட்டது. அதில் ராஜீவ் காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவிக்க முடிவெடுத்து அதை தீர்மானமாக ஆளுநருக்குப் பரிந்துரை செய்து தமிழக அரசு அனுப்பியது.

    தமிழக அரசு பரிந்துரை வழங்கியும் ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் ஆளுநருக்கு கோரிகைகள் வந்து கொண்டே இருக்கிறன்றது.

    இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி எழுவர் விடுதலை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் எழுவர் விடுதலை என்பது தமிழர்களின் பிரச்சனை மட்டுமல்ல. இது ஒரு மனித உரிமை பிரச்னை. இத்தனை வருடங்கள் அவர்களை சிறையில் அடைத்து வைத்திருந்ததே போதும். அவர்களின் விடுதலை குறித்து ஆளுநர் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்துள்ளார்.



    மேலும் எழுவர் விடுதலை குறித்து இயக்குனர் ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் திறக்கட்டும் கதவுகள். கவர்னரை சென்றடையும் வரை பதிவுகள் இடுவோம் என்று குறிப்பிட்டிருந்தார்.



    தொடர்ந்து எழுவர் விடுதலை குறித்து பதிவுகள் ட்விட்டரில் பதிவிடுவதால் தற்போது  #28YearsEnoughGovernor என்ற ஹேஸ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்ட்டாகி வருகிறது.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor vijay sethupathi

    அடுத்த செய்தி