Home /News /entertainment /

விஜய் சேதுபதியின் 25-வது படமான ’சீதக்காதி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் சேதுபதியின் 25-வது படமான ’சீதக்காதி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சீதக்காதி படத்தில் நடிகர் விஜய் சேதுபதி

சீதக்காதி படத்தில் நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதியின் 25-வது படமான ’சீதக்காதி’ அடுத்த மாதம் நவம்பர் 16-ம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. Actor Vijay Sethupathi's 25th film 'Seethakathi' will be released on November 16.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
நடிகர் விஜய் சேதுபதியின் 25-வது படமான ’சீதக்காதி’ அடுத்த மாதம் நவம்பர் 16-ம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதியை வைத்து ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற ஹிட் படத்தை இயக்கியவர் பாலாஜி தரணிதரன். இவர் தான் தற்போது விஜய் சேதுபதியின் 25-வது படமான சீதக்காதி படத்தையும் இயக்கியுள்ளார். கலைக்கும் வயதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை கதைக்களமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி 80 வயதுடைய முதியவர் தோற்றத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மூத்த நடிகை அர்ச்சனா நடித்து வருகிறார். இவர்களுடன் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், மகேந்திரன், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் தோற்றத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் படக்குழு இதற்காக ‘பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ உள்ளிட்ட படங்களுக்கு மேக்கப் மேனாகப் பணியாற்றிய கேவின் ஹானோவை ஒப்பந்தம் செய்துள்ளது.

விஜய்சேதுபதியின் 25-வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்தப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அடுத்தகட்டமாக படத்தின் சென்சார் குறித்த தகவலையும், விஜய்சேதுபதி வேடன் போல் தோன்றும் போஸ்டரையும் தொடர்ந்து படக்குழு வெளியிட்டு வந்தனர். சென்சாரில் இந்தப் படம் ‘யூ’ சான்றிதழைப் பெற்றுள்ளது.

படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில் படத்தினை நவம்பர் 16-ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதியின் 25-வது படத்திற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vijay Sethupathy, Kollywood, Seethakathi

அடுத்த செய்தி