• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தோழர் பினராயி விஜயனை நன்றியோடு வணங்குகிறேன்: விஜய்சேதுபதி உருக்கம்!

தோழர் பினராயி விஜயனை நன்றியோடு வணங்குகிறேன்: விஜய்சேதுபதி உருக்கம்!

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட மக்களுக்கு ரூ.10 கோடி நிதியும், நிவாரணப் பொருட்களும் அளித்த கேரள முதலமைச்சருக்கு நடிகர் விஜய் சேதுபதி நன்றி கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட மக்களுக்கு ரூ.10 கோடி நிதியும், நிவாரணப் பொருட்களும் அளித்த கேரள முதலமைச்சருக்கு நடிகர் விஜய் சேதுபதி நன்றி கூறியுள்ளார்.

    கடந்த 16-ம் தேதி வீசிய கஜா புயலால் திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பெரும் அழிவை சந்தித்துள்ளன. தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்தப் புயல் சீற்றத்தால் ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன. இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

    புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்த நிலையில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அரசியலைக் கடந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று நடிகரும் , மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 கோடி நிதியும், 14 லாரிகளில் நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைப்பதாகவும், 72 மின் ஊழியர்கள் சீரமைப்பு பணிக்காக வருவதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



    கேரள அரசின் இந்த உதவி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் விஜய் சேதுபதி, “புயல் தாக்கிய அடுத்த நாளே நிவாரணப் பொருட்களை அனுப்பியதோடு இன்று தமிழர்களின் துயரை துடைக்கும் விதத்தில் தற்போது 10 கோடி ரூபாய் நிதியையும் அறிவித்த கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் அவர்களின் சகோதரத்துவ மனிதம் கண்டு மகிழ்ச்சியோடும் நன்றிகளோடும் வணங்குகிறேன்” என்று கூறியுள்ளார்.



    நடுரோட்டில் சாவதானமாக இளைஞரின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர் - வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: