ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘இதயத்தை திருடாதே’ சீரியல் பிரபலத்திற்கு சர்பிரைஸ் வீடியோ கால் பண்ண விஜய் சேதுபதி!

‘இதயத்தை திருடாதே’ சீரியல் பிரபலத்திற்கு சர்பிரைஸ் வீடியோ கால் பண்ண விஜய் சேதுபதி!

வீடியோ கால் மூலம் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஜய் சேதுபதி!

வீடியோ கால் மூலம் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஜய் சேதுபதி!

இதயத்தை திருடாதே தொடரில் கதாநாயகனாக நடிக்கும் நவீன்குமாருக்கு, விஜய்சேதுபதி வீடியோ கால் மூலம் சர்பிரைஸ் கொடுத்து, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் காதல் தொடரான ‘இதயத்தை திருடாதே’ சீரியலில் நாயகனாக நவீன்குமார், நாயகியாக பிந்து ஆகியோர் நடித்து வருகின்றனர். இயக்குநர் ராதாகிருஷ்ணனின் இயக்கத்தில் காதல், சண்டை, அதிரடி திருப்பம் என விறுவிறுப்பான நாடகம் சென்று கொண்டிருக்கிறது. இளைஞர்கள் விரும்பி பார்க்கும் தொடராகவும் உள்ளது.

இந்நிலையில், லீட் ரோலில் சூப்பரான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நவீன் குமார் அண்மையில் பிறந்தநாளைக் கொண்டாடினார். சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய அவருக்கு, திடீரென விஜய் சேதுபதி வீடியோ கால் மூலம் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து சர்பிரைஸ் செய்துள்ளார்.

அவர் எதிர்பார்க்காத நேரத்தில் கிடைத்த வாழ்த்தை மகிழ்ச்சியில் இருந்த நவீனை, இதயத்தை திருடாதே சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த சக நடிகர்களும் மனதார வாழ்த்தினர். இந்தத் தொடர் அண்மையில் 500-வது எபிசோடை நிறைவு செய்தது. மாமியார் - மருமகள் சண்டை, குடும்ப பிரச்சனைகளை மையமாக வைத்தே பெரும்பாலான சீரியல்கள் இருக்கும் நேரத்தில் பருவ வயதில் இருக்கும் இளைஞர்களை குறி வைத்து இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது.

AlsoRead :  ’அப்பாவே மகனாக விரல் பிடித்திருக்கிறார்’ - சிவகார்த்திகேயன் உருக்கம்!

காதல் தொடர்களில் சூப்பர் ஹிட்டான சரவணன் - மீனாட்சி, ஆபிஸ் போன்ற தொடர்கள் ஏற்கனவே வரவேற்பை பெற்ற நிலையில், இதயத்தை திருடாதே தொடரும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கும்பகோணத்தில் உள்ள இரு அரசியல்வாதிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் நாயகன் மற்றும் நாயகியின் காதல், என்னென்ன திருப்பங்களையும், சுவாரஸ்யங்களையும் சந்திக்கிறது என்பதை மையமாக வைத்து கதைக்களம் நகர்ந்து கொண்டு இருக்கிறது.
 
View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)நவீன் குமாரும், நாயகி பிந்துவும் நடிப்பில் கலக்குகின்றனர். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் தொடர் தற்போது 500 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கொரோனா காரணமாக 500வது எபிசோடை அனைவரும் இணைந்து கொண்டாட முடியவில்லை என்ற வருத்தத்தை இதயத்தை திருடாதே குழுவினர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தனர்.

Photos : விஜே அஞ்சனா ரங்கன் லேட்டஸ்ட் போட்டோஸ்..

கதாநாயகன் நவீன் எழுதியிருந்த பதிவில், இதயத்தை திருடாதே தொடர் 500வது எபிசோடை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். மக்கள் கொடுக்கும் பேரன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதேபோல், நடிகை கார்த்திகாவும், ரசிகர்கள் இல்லாமல் இந்த தொடரின் வெற்றி சாத்தியமில்லை எனக் கூறியிருந்தார். ஏற்கனவே ரசிகர்களின் ஆதரவைப் பெற்றிருந்த நவீன்குமாருக்கு, விஜய் சேதுபதி வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்திருப்பதன் மூலம் இன்னும் பிரபலமான முகமாக மாறியுள்ளார்.

Published by:Tamilmalar Natarajan
First published: