Home /News /entertainment /

இதில் நான் எங்கிருக்கிறேன்? 10-ம் வகுப்பு புகைப்படத்தை வெளியிட்ட விஜய் சேதுபதி!

இதில் நான் எங்கிருக்கிறேன்? 10-ம் வகுப்பு புகைப்படத்தை வெளியிட்ட விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி வெளியிட்ட புகைப்படம்

விஜய் சேதுபதி வெளியிட்ட புகைப்படம்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    `96’ படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி தனது 10-ம் வகுப்பு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

    நடிகர் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் இயக்குநர் பிரேம் குமார் இயக்கியுள்ள படம் 96. இந்தப் படம் நாளை வெளியாகிறது. பள்ளிப் பருவத்தில் நண்பர்களாக இருந்தவர்கள் பல வருடங்களுக்கு பின்பு மீண்டும் சந்திக்கும் கதையே 96 என்ற படமாக உருவாகியுள்ளது.

    இந்நிலையில் படத்தின் ரிலீசை முன்னிட்டு தனது 10-ம் வகுப்பு புகைப்படத்தை நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதே போல நடிகை த்ரிஷா, இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் ரமேஷ் திலக், நடிகர் விக்ராந்த் ஆகியோர் தங்களது பள்ளிப் பருவ புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

    இருப்பினும் தனது 10-ம் வகுப்புப் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் சேதுபதி அதில் தான் எங்கே நிற்கிறேன் என்பதை அடையாளம் காட்டவில்லை. இதனால் மாணவர்களில் யார் விஜய் சேதுபதி என்பதை கண்டுபிடிப்பதில் ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர். இதற்கு விஜய்சேதுபதி விடை சொன்னால் மட்டுமே குழப்பம் தீரும்.

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: 96 movie, Challenge in Twitter, Trisha, Vijay sethupathi, Vijay sethupathy School photo

    அடுத்த செய்தி