குஷ்பு வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட விஜய் சேதுபதி.. மகிழ்ச்சியாய் ட்வீட் போட்ட குஷ்பு

விஜய் சேதுபதி - குஷ்பு

நடிகர் விஜய் சேதுபதி குஷ்பு வீட்டிற்கு சென்று மதிய உணவு சாப்பிட்டுள்ளார்.அப்போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

  • Share this:
     நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார் என்று கூறலாம். இவரை ரசிகர்கள் செல்லமாக மக்கள் செல்வன் என்று அழைத்து வருகின்றனர். மற்ற ஹீரோக்கள் ரசிகர்களிடம் பழகுவதற்கும் விஜய் சேதுபதி ரசிகர்களிடம் பழகுவதற்கும் ஒரு வித்தியாசம் உள்ளது.

    ஆம்.நடிகர் விஜய் சேதுபதி ரசிகர்களை பார்த்தால் அவர்கள் இவருக்கு முத்தம் கொடுப்பார்களோ இல்லையோ,கண்டிப்பாக விஜய் சேதுபதி முத்தம் கொடுத்து, ரசிகரை கட்டி அனைத்து தனது அன்பை வெளிப்படுத்துவார்.இவரின் இந்த செயல் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து பொங்கலை முன்னிட்டு விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்த மாஸ்டர் திரைப்படம் வெளியானது. அந்த படத்தில் பவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதி ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார்.நேற்று விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் சேதுபதி ஹிந்தியில் நடிக்கவிருக்கும் ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படத்தை பற்றிய அறிவிப்புகளும் வெளியானது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடா, மராத்தி உள்ளிட்ட 6 மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இதையடுத்து பிரபலங்கள் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை விஜய் சேதுபதிக்கு தெரிவித்து வந்தனர்.


    இந்நிலையில் நடிகை குஷ்பு விஜய் சேதுபதியை இன்று சந்தித்தது குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.அதில் ‘விஜய் சேதுபதி மதிய உணவை எங்களுடன் சேர்ந்து சாப்பிட விஜய் சேதுபதி இங்கே வந்திருந்தார்.சாதாரண நாளை மிக சிறப்பான நாளாக மாற்றியதற்கு நன்றி’ என்று கூறி இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.

     

     

     
    Published by:Tamilmalar Natarajan
    First published: