முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தனது மகனுடன் விளையாடி மகிழும் நடிகர் விஜய்: வைரலாகும் புகைப்படம்

தனது மகனுடன் விளையாடி மகிழும் நடிகர் விஜய்: வைரலாகும் புகைப்படம்

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய் தனது மகனுடன் சேர்ந்து வீடியோ கேம் விளையாடும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Last Updated :

நடிகர் விஜய் படங்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்த வகையில் இருக்கும் என்று கூறலாம்.இவரை இளைய தளபதி விஜய் என்று ஆரம்ப காலத்தில் ரசிகர்கள் அழைத்து வந்தனர்.ஆனால் தற்போது தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

பொதுவாக  சினிமா பிரபலங்களை ரசிகர்கள் விரும்பினால் அவர்களின் குழந்தைகளையும் பிடிப்பது வழக்கமான ஒன்று.அந்த வகையில் விஜய்யின் மகன் சஞ்சய் சிறு வயதில் போக்கிரி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பார். மகள் திவ்ய சாஷாவும் தெறி படத்தில் கடைசியில் விஜய்யுடன் ஒரு சீனில் நடித்திருப்பார்.இவை இரண்டுமே ரசிகர்கள் மத்தியிம் பெரும் வரவேற்பை பெற்றது.

அந்த வகையில் விஜய் மகனான சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா இருவரின் புகைப்படம் அல்லது வீடியோ எப்படியாவது சமூக வலைதளங்களில் வைரலாகி விடும்.இதனை தொடர்ந்து ஜான்சன் சஞ்சய் ஜக்‌ஷன், சிரி போன்ற ஷாட் பிலிம்களையும் இயக்கியுள்ளார்.அதோடு சில காலம் தொகுப்பாளராகவும் இருந்து வந்தார்.

நடிகர் விஜய்

இந்நிலையில் நடிகர் விஜய் தனது மகன் ஜான்சன் சஞ்சயுடன் வீடியோ கேம் விளையாடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ஆனால் இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இந்த புகைப்படத்தினை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

First published:

Tags: Actor vijay