எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இறுதிச் சடங்கு - நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்

மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இறுதிச் சடங்கு - நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்
மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
  • News18
  • Last Updated: September 26, 2020, 12:45 PM IST
  • Share this:
கொரோனா தொற்று காரணமாக சென்னை சூளைமேட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 5-ம் தேதி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவந்த அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்த நிலையில் நுறையீரல் பாதிப்பு காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்.

Also read... எஸ்.பி.பி.க்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் என்னென்ன?


அவரது மறைவைத் தொடர்ந்து உடல் கோடம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர், அங்கிருந்து சென்னையை ஒட்டிய செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. தாமரைப் பாக்கத்திலுள்ள அவரது உடலுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் அங்கு நேரில் சென்று எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மகனான சரணிடம் விஜய் துக்கம் விசாரித்தார். எஸ்.பி.பியின் உடல் 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது.
First published: September 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading