யாருக்கும் தெரியாமல் உதவிய விஜய்... நீண்ட நாட்களுக்குப் பின் வெளிவந்த உண்மை

Web Desk | news18
Updated: October 9, 2018, 7:59 PM IST
யாருக்கும் தெரியாமல் உதவிய விஜய்... நீண்ட நாட்களுக்குப் பின் வெளிவந்த உண்மை
சர்கார் விஜய்| மாற்றுத்திறனாளி செந்தில்நாதன்
Web Desk | news18
Updated: October 9, 2018, 7:59 PM IST
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்ற மாற்றுத்திறனாளிக்கு நடிகர் விஜய் உதவி செய்ததாக நிகழ்ச்சித் தொகுப்பாளர் மா.க.பா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் அவ்வப்போது பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்த விஜய் அவரது குடும்பத்திற்கு நிதி உதவி அளித்தார். அதைத்தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கும் சென்றிருந்தார். இவை அனைத்தும் சமூக வலதளங்களின் வாயிலாக செய்தியாகின. அதேபோல் சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சத்தை தனது ரசிகர்கள் வாயிலாக கொடுத்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் ஒரு பார்வையற்ற சூப்பர் சிங்கர் பாடகருக்கு உதவி செய்திருக்கிறார். முன்னதாக பாடகர் செந்தில் நாதன் கடந்த 2014-ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது நடிகர் விஜய்-ன் பெயரை மேடையிலேயே கூறியிருந்தார். இதைப்பார்த்த விஜய் அவரை வீட்டுக்கு அழைத்துள்ளார். அப்போது அவருக்கு விலையுயர்ந்த ஐ-போடு உள்ளிட்டவற்றை பரிசுப் பொருளாக கொடுத்து உதவி செய்துள்ளார். அப்போது நடிகர் மா.கா.பா உடனிருந்துள்ளார். மேலும் விஜய் தான் செய்த இந்த காரியத்தை தொலைக்காட்சியில் சொல்லிவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இதை நிகழ்ச்சித் தொகுப்பாளர் நடிகர் மா.கா.பா.வை நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது உறுதிப்படுத்தினார். மேலும் இது நீண்ட நாட்களுக்கு முன்பு நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.இருப்பினும் நீண்ட காலத்துக்கு முன் நடிகர் விஜய் செய்த உதவி தற்போது வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.
First published: October 9, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...