தேவையற்ற போஸ்டர்களை ஒட்ட வேண்டாம் - ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தல்

விஜய் மக்கள் இயக்கத்தின் வலுப்படுத்துவது பற்றியும் அதன் மூலம் பல நலத்திட்டங்கள் செய்வது பற்றியும் விஜய் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

தேவையற்ற போஸ்டர்களை ஒட்ட வேண்டாம் - ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தல்
விஜய்
  • News18
  • Last Updated: October 24, 2020, 9:50 AM IST
  • Share this:
தேவையற்ற போஸ்டர்களை ஒட்ட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

திருச்சியில் நேற்று விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் 'நாளைய முதல்வர் விஜய்' என்ற போஸ்டர்கள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை தன்னுடைய பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் சந்தித்தார். அப்போது தேவையற்ற போஸ்டர்கள் எதுவும் ஒட்ட வேண்டாம் என அவர்களிடம் விஜய் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

மேலும் விஜய் மக்கள் இயக்கத்தின் வலுப்படுத்துவது பற்றியும் அதன் மூலம் பல நலத்திட்டங்கள் செய்வது பற்றியும் விஜய் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.


Also read... பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது ’ராதே ஷ்யாம்’ மோஷன் வீடியோ!சில தினங்களுக்கு முன் இயக்குனரும் விஜயின் தந்தையுமாகிய எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும் நேரத்தில் அரசியல் சக்தியாக மாறும் என்று பேசியிருந்த நிலையில் விஜய் தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஆனால் இது குறித்து விளக்கம் அளித்துள்ள விஜயின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் விஜய் ரசிகர் மன்றத்தின் சந்திப்பு எந்த அரசியல் உள்நோக்கமும் கொண்டது கிடையாது. இது ஒரு வழக்கமான சந்திப்பு என்று தெரிவித்துள்ளார்.
First published: October 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading