புதுச்சேரியில் விஜய்: ஸ்தம்பித்த போக்குவரத்து - வீடியோ

news18
Updated: September 15, 2018, 8:03 AM IST
புதுச்சேரியில் விஜய்: ஸ்தம்பித்த போக்குவரத்து - வீடியோ
news18
Updated: September 15, 2018, 8:03 AM IST
நடிகர் விஜய் புதுச்சேரிக்கு சென்றுள்ளதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் விஜய் மக்கள் இயக்க தலைவர் ஆனந்தின் மகளுக்கு பாண்டிச்சேரி ஆரோவில்லில் உள்ள தங்கமித்ரா ஹாலில் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் புதுச்சேரிக்கு இரவு 7.10 மணிக்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தி அடுத்த 10 நிமிடத்தில் அங்கிருந்து கிளம்பினார். நடிகர் விஜய்

வருவதை அறிந்த ரசிகர்கள் அப்பகுதியில் குவிந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

 இந்நிலையில் விஜய் புதுச்சேரிக்கு சென்றதை அவரது ரசிகர்கள் பாண்டிவெல்கம்ஸ் தளபதி என்ற ஹேஷ்டேக்குடன் கொண்டாடி வருகின்றனர். இந்த ஹேஸ்டேக் உருவாக்கப்பட்ட சிறிது நேரத்தில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
Loading...

 மெர்சல் பட விவகாரத்தில் பாஜக.வினர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவரை அதிக நேரம் பாண்டிச்சேரியில் தங்க அனுமதி மறுத்து போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
First published: September 14, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்