கோட்டையில் விஜய் - ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

விஜய்

விஜயின் அரசியலைக் குறிக்கும் வகையில் விழுப்புரத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது வைரலாகிவருகிறது.

 • Share this:
  விஜய் கோட்டையிலிருந்து வெள்ளை வேட்டிச் சட்டையில் சிவப்பு கம்பள விரிப்பில் நடந்து வரும் போஸ்டர் வைரலாகி வருகிறது.

  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகத் திகழும் விஜயின் 47-வது பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. பீஸ்ட் என்று அந்தப் படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று இரண்டு போஸ்டர்கள் வெளியாகின. விஜயின் ரசிகர்கள் அந்தப் போஸ்டர்களை சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.

  இதற்கிடையில், விஜய்யின் 47 வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் வகைதொகை இல்லாமல் போஸ்டர் வெளியிட்டு வருகின்றனர். 'தம்பி வா தலைமை ஏற்க வா' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விஜய் கையில் செங்கோலை தருவது போன்று திண்டுக்கல் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.

  இந்நிலையில் விழுப்புரம் ரசிகர்கள், கோட்டை பின்னணியில் சிவப்பு கம்பள விரிப்பில் விஜய் வெள்ளை வேட்டிச் சட்டையில் நடந்து வருவது போல் போஸ்டர் வடிவமைத்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  விஜய் போஸ்டர்


  விஜய் அரசியல் ஆசையில் பல வருடங்கள் முன்பு சில நகர்வுகளை எடுத்தார். அதன் காரணமாக, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளானார். அவரது தலைவா படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், தனியார் கல்லூரியில் ரசிகர்களுடன் பிறந்தநாளை கொண்டாட முயன்ற விஜய் தடுக்கப்பட்டார். ஜெயலலிதா கொடுத்த அழுத்தம் காரணமாக தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தையே ரத்து செய்தார் விஜய்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தற்போது முதல்வராகியிருக்கும் மு.க.ஸ்டாலின் அதுபோன்ற ஜனநாயக விரோத அடக்குமுறையில் ஈடுபட மாட்டார் என்ற நம்பிக்கையில், விஜய் முதல்வராக வேண்டும் என்ற தங்களின் ஆசையை ரசிகர்கள் இப்படி போஸ்டர் வடிவமைத்து வெளியிட்டு வருகின்றனர்.
  Published by:Karthick S
  First published: