Home /News /entertainment /

`நோட்டா’ விமர்சனத்துக்கு முழுப்பொறுப்பேற்று அறிக்கை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா!

`நோட்டா’ விமர்சனத்துக்கு முழுப்பொறுப்பேற்று அறிக்கை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா!

விஜய் தேவரகொண்டா.

விஜய் தேவரகொண்டா.

  • News18
  • Last Updated :
    நோட்டா படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்டிருக்கும் அறிக்கை வரவேற்பைப் பெற்று வருகிறது.

    இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் நோட்டா. இந்தப் படம் தெலுங்கு மற்றும் தமிழில் கடந்த வாரம் வெளியானது. அர்ஜூன் ரெட்டி, கீத கோவிந்தம் ஆகிய படங்களுக்குப் பின்னர் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் வெளிவரும் படம் என்பதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

    இந்நிலையில் தாமாக முன்வந்து நடிகர் விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே வேளையில், முன்னணி நடிகர் ஒருவர் தனது படத்தின் மீதான விமர்சனத்தை ஒப்புக் கொண்டு அறிக்கை வெளியிட்டிருப்பதற்கு வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

    விஜய் தேவரகொண்டா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ``எனக்காக எனது படத்தை பார்க்கச் செல்பவர்களுக்கு அன்பைத் தெரிவிக்கிறேன். தோற்றுப் போக வேண்டும் என்று விருமியவர்களுக்கு புன்னகையை பரிசளிக்கிறேன்.

    நான் எந்தவித காரணங்களும் சொல்லமாட்டேன். நோட்டா படத்திற்கான முழு பொருப்பையும் ஏற்று பெருமிதம் கொள்கிறேன். அது நான் சொல்ல விரும்பிய கதை. அந்த கதாபாத்திரத்தை நான் ஆராய்ந்து நடித்து எனது நடிப்பை வெளிப்படுத்தினேன். தமிழகத்துக்கும், படத்தை விரும்பிய தேசிய ஊடகங்களுக்கும் நன்றி. உங்களது அன்பு வந்து சேர்ந்தது. அதே வேளையில் ஏமாற்றங்களும், விமர்சனங்களும் கிடைக்கப் பெற்றன. அந்த விமர்சனங்களை நான் அதீத அக்கறையுடன் அலசி ஆராயவுள்ளேன். எனது தரப்பில் நான் தவறவிட்ட கணக்கை சீர் செய்வேன். இருப்பினும் எனது எண்ணப் போக்கு மாறாது. அது தான் நான்.

    வெற்றியும் தோல்வியும் ஒரு ரவுடியை (விஜய் தேவரகொண்டா) உருவாக்கவோ உடைக்கவோ போவதில்லை. முன்னேறுவதை நிறுத்தும் போது தான் சுயத்தை இழப்பீர்கள். என்னைப் போன்றவர்கள் எப்போதும் எதிலும் வெற்றி பெற வேண்டும் என்பதில்லை. எப்போதும் வெற்றிக்காக போராடுவதில் தான் அந்த ரவுடி இருக்கிறான். உள்ளே எரியும் நெருப்பு அது. அதனால் என்னைப் போன்ற சிந்தனை கொண்டவர்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்துங்கள்.

    இதை கொண்டாடுபவர்களுக்கு நான் மீண்டும் வருவேன் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார்.

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Kollywood, NOTA, NOTA movie, Twitter, Vijay deverakonda

    அடுத்த செய்தி