Home /News /entertainment /

விஜய், அஜித் இருவரில் யார் ஃபேவரைட் - விஷ்ணு விஷால் அசத்தல் பதில்

விஜய், அஜித் இருவரில் யார் ஃபேவரைட் - விஷ்ணு விஷால் அசத்தல் பதில்

நடிகர் விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால்

நடிகர் விஜய், அஜித் இருவரில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்ற நெட்டிசனின் கேள்விக்கு நடிகர் விஷ்ணு விஷால் பதிலளித்துள்ளார். 

  • News18
  • Last Updated :
நடிகர் விஜய், அஜித் இருவரில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்ற நெட்டிசனின் கேள்விக்கு நடிகர் விஷ்ணு விஷால் பதிலளித்துள்ளார். 

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ராட்சசன். இந்தப் படத்தை முண்டாசுப்பட்டி பட இயக்குநர் ராம்குமார் இயக்கியிருந்தார்.

விஷாலின் கேரியரிலேயே சிறந்த படம் என்ற பெயரை எடுத்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல் மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ள படம் சிலுக்குவார்பட்டி சிங்கம்.

ரிலீசுக்கு தயாராகியிருக்கும் இந்தப் படத்தை விளம்பரத்தும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர் . அந்த வகையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அப்போது ஒருவர் விஜய் , அஜித் இருவரில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்வியை முன்வைத்துள்ளார். அதற்கு பதிலளித்த நடிகர் விஷ்ணு, ஸ்டைல் என்றால் விஜய் தான் என்றும் மாஸ் என்றால் அஜித்தான் என்றும் பதிலளித்துள்ளார்.



மேலும் இதற்கு காரணமாக இருப்பது இருவருக்குள்ளும் இருக்கும் கடின உழைப்புதான் என்றும் கூறியுள்ளார்.

Also See:

வசூல் நாயகன் விஜய்-யின் வெற்றி ரகசியம்! - ஸ்பெஷல் வீடியோ



காதல் மன்னன் அஜித் வளர்ந்த கதை - ஸ்பெஷல் வீடியோ

Published by:Sheik Hanifah
First published:

Tags: Actor Ajith, Actor vijay, Actor Vishnu Vishal

அடுத்த செய்தி