ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நீங்கள் வாய்ப்பு கொடுத்த உடனே எனக்கு விடிந்துவிட்டது - கமல் 60 நிகழ்ச்சியில் வடிவேலு நெகிழ்ச்சி

நீங்கள் வாய்ப்பு கொடுத்த உடனே எனக்கு விடிந்துவிட்டது - கமல் 60 நிகழ்ச்சியில் வடிவேலு நெகிழ்ச்சி

நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு

Kamal 60 Ungal Naan Function | Vadivelu Speech

  • News18
  • 2 minute read
  • Last Updated :

நான்காவது படத்திலேயே கமல், சிவாஜி என மிகப்பெரிய ஜாம்பவான்கள் உடன் நடிக்கக்கூடிய வாய்ப்பு உங்களால் கிடைத்தது என்று நடிகர் வடிவேலு நெகிழ்ச்சியுடன் பேசினார்.

நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டு சினிமா பயணத்தை கவுரவிக்கும் வகையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், "உங்கள் நான்" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

ரஜினி, இளையராஜா, விஜய் சேதுபதி என தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இதில் பங்கேற்றனர். நடிகர் வடிவேலு, அரங்கின் உள்ளே நுழையும் போதே ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர்.

வடிவேலு மேடையேறி பேசும் போதும் ரசிகர்கள் ஆரவாரம் குறையவில்லை. அவர் பேசியதாவது, “60 வருஷமா அவர் எவ்வளவு விஷயங்களை பார்த்து இருப்பார். அவருக்கு எத்தனை ஏவுகணைகள் பறந்திருக்கும், எத்தனை பாம் வச்சிருப்பாங்க. அதையெல்லாம் தாண்டி பாயும் இடத்தில் பாய்வதும் மறைய வேண்டிய இடத்தில் மறைவதும், இப்படி பல வித்தைகளை காண்பித்து நடிகர் கமல்ஹாசன் இன்று இந்த இடத்தில் இருப்பது சாதாரண விஷயம் அல்ல. அவர் ஒரு பல்கலைக்கழகம்.

தேவர் மகன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த கமல்ஹாசன், நாளை காலை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்படி சொல்லி இருந்தார். நான் முந்தைய நாள் இரவே அங்கு போய் விட்டேன்.

பின்னர் கமல்ஹாசன் என்னிடம் “நாளை காலை விடிந்தவுடன் தானே... உங்களை வரச் சொன்னேன்... ஏன் முன்பே வந்தீர்கள்” என்று கேட்டார். அதற்கு நான் “நீங்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்த உடனேயே எனக்கு விடிந்துவிட்டதுனு சொன்னேன்” என்று கூறினார்.

நான்காவது படத்திலேயே கமல், சிவாஜி என மிகப்பெரிய ஜாம்பவான்கள் உடன் நடிக்கக்கூடிய வாய்ப்பு உங்களால் கிடைத்தது. அப்போது எனக்கும் விடிந்தும் விட்டது எனவும் வடிவேலு பெருமைப்பட்டார்.

மேலும், “தேவர் மகன் படத்தில் சிவாஜி இறந்ததும். எல்லோரும் அழக் கூடிய காட்சி இடம் பெற்றிருக்கும். அப்போது என்னை அழுகச் சொன்னார்கள். இப்போது எப்படி அழுகிறேன். பாருங்கள் என்று என் மனதுக்குள் நினைத்துக் கொண்டே,  கமலை விட நான் அதிகமாக அழுது கொண்டிருந்தேன்...

அப்போது பிணமாக நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன் திடீரென எழுந்து... யார்ரா... இவன்.. எனக்கென்ன 2 மகனா நீ ஏன்டா இப்படி அழுகுற...? போய் தள்ளி உக்காருங்க என்று என் வாயில் துண்டை சுற்றி கொண்டு அமர சொன்னார்.... அதற்கு பிறகு என்னை தனியாக அழைத்து இவன் நன்றாக மதுரை தமிழ் பேசுகிறான் என்றும் பாராட்டி எனக்கு முத்தம் அளித்தார்.. அதற்குப் பிறகுதான் நடிப்பு என்றால் என்ன என்று நான் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்" என வடிவேலு பெருமிதமாக பேசினார்.

நீண்ட நாட்களாக நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருக்கும் வடிவேலு, கமல்ஹாசன் இயக்கத்தில் உருவாக உள்ள தலைவன் இருக்கிறான் திரைப்படத்தில் நடிப்பதை நிகழ்ச்சி மேடையில் உறுதி செய்துள்ளார் .

Also See...

”எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்... ஆனால் அதிசயம் நிகழ்ந்தது” - ரஜினிகாந்த்

அரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும்! உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி

ரஜினி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்! கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு

Also See...

Published by:Sankar
First published:

Tags: Actor Vadivelu