Home /News /entertainment /

Vadivelu : ராம்நாடு, ஒரத்தநாடு என பல நாடுகள் இருக்கின்றன... நல்லா இருக்கிற தமிழ்நாட்டை ஏன் பிரிக்கணும் - நடிகர் வடிவேலு

Vadivelu : ராம்நாடு, ஒரத்தநாடு என பல நாடுகள் இருக்கின்றன... நல்லா இருக்கிற தமிழ்நாட்டை ஏன் பிரிக்கணும் - நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு

நல்லா இருக்கிற தமிழ்நாட ஏன் பிரிச்சுக்கிட்டு? இதை கேட்கும்போது தலை சுத்துது விட்டுடுங்க...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    ராம்நாடு, ஒரத்தநாடு என பல நாடுகள் இருக்கின்றன நல்லா இருக்கிற தமிழ்நாட்டை ஏன் பிரிக்கணும், கேட்கும்போதே தலைசுத்துது என்று நடிகர் வடிவேலு கூறினார்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்த நடிகர் வடிவேலு முதலமச்சரின் கொரோனா பொதுநிவாரண நிதிக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிபர் வடிவேலு செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார், அப்போது, மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் உலகமே உற்றுப் பார்க்கும் அளவில் கொரோனா கட்டுப்படுத்தி உள்ளார். தமிழகத்தில் பொற்கால ஆட்சி நிலவுவதாகவும் கூறி பாராட்டிப் பேசினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும், தமிழக முதல்வரே தெருத்தெருவாக சென்று மக்கள் தடுப்பூசி போட முகாம் அமைத்து வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். யார் மனதும் புண்படுத்தாமல் ஒவ்வொரு திட்டங்களும் செயல்படுத்தி வருகிறார். தமிழக மக்களுக்கு பொற்கால ஆட்சியை அமைத்துக் கொடுத்துள்ளார். கொரோனா தடுப்பு ஊசியை செலுத்தி மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும்” என்றார்.

    Read More : நடிகர் வடிவேலு முதலமைச்சரை சந்தித்து ரூ. 5 லட்சம் நிதி வழங்கினார்

    மீண்டும் பழையபடி அதிக படங்களில் உங்களைப் பார்க்கலாமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “கண்டிப்பாக நல்லதே நடக்கும்” என்று கூறினார். தொடர்ந்து பேசிய வடிவேலு, நான் இரண்டு தடுப்பூசி போட்டிருக்கிறேன். இன்னும் 40 போடச் சொன்னால் கூட போடுவேன். மக்கள் அனைவரும் முன்வந்து ஊசி போடணும். குடும்பத்தை காப்பாற்ற ஊசியை தவிர வேறு வழியில்லை. இந்த அரசு நமக்கு நிறைய உதவி பண்றாங்க.

    Must Read : ஒரே மாதத்தில் உலகமே உற்றுப் பார்க்கும் அளவில் கொரனாவை கட்டுப்படுத்தி உள்ளார் மு.க.ஸ்டாலின் - நடிகர் வடிவேலு

    நான் அரசியல் பேசவில்லை. ராம்நாடுனு ஒன்னு இருக்கு, ஒரத்தநாடுனு ஒன்னு இருக்கு, இப்படி நிறைய இருக்கு. கொங்குநாடு. பல நாடு. இப்படியே பிரிச்சோம்னா அவ்வளவு தான். அதெல்லாம் பிரிக்க முடியுமா? நல்லா இருக்கிற தமிழ்நாட ஏன் பிரிச்சுக்கிட்டு? இதை கேட்கும்போது தலை சுத்துது விட்டுடுங்க என்றார் வடிவேலு.

    சமீபத்தில் பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் கொங்கு மண்டலத்தை, கொங்கு நாடு என தனி மாநிலமாகப் பிரிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். அது தற்போதய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Actor Vadivelu, Kongu Nadu, MK Stalin

    அடுத்த செய்தி