• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Vadivelu : மு.க.ஸ்டாலின் ஆட்சி எப்படி இருக்கிறது... நடிகர் வடிவேலுவின் அசத்தல் பதில்

Vadivelu : மு.க.ஸ்டாலின் ஆட்சி எப்படி இருக்கிறது... நடிகர் வடிவேலுவின் அசத்தல் பதில்

நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யார் மனதையும் புண்படுத்தாமல் ஒவ்வொரு திட்டங்களும் செயல்படுத்தி வருகிறார்.

  • Share this:
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து நடிகர் வடிவேலு கொரோனா பொது நிவாரண நிதியாக 5 லட்சம் ரூபாய் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்ததுமிக மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக எளிமையாக இருக்கிறார் குடும்பத்தில் ஒரு நபராக நினைத்து என்னிடம் பேசினார். அவரை சந்தித்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்தேன்.

ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் உலகமே உற்றுப் பார்க்கும் அளவில் கொரனாணாவை கட்டுப்படுத்தி உள்ளார் தமிழக முதலமைச்சரே தெருத்தெருவாகச் சென்று மக்கள் தடுப்பூசி போட முகாம் அமைத்து வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்திய முதல்வர் இவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யார் மனதையும் புண்படுத்தாமல் ஒவ்வொரு திட்டங்களும் செயல்படுத்தி வருகிறார். தமிழக மக்களுக்கு பொற்கால ஆட்சியை அமைத்துக் கொடுத்துள்ளார். பெண்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். கொரோனா தடுப்பு ஊசியை செலுத்தி மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும். நான் அரசியல் பேசவில்லை தமிழ்நாடு நன்றாக இருக்கிறது அதை ஏன் பிரிக்கவேண்டும்.” என்று கூறினார். தொடர்ந்து பேசிய வடிவேலு, தான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அப்போது மீண்டும் பழையபடி அதிக படங்களில் உங்களைப் பார்க்கலாமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “கண்டிப்பாக நல்லதே நடக்கும்” என்று கூறினார். பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் போடுகிறார்களா என்ற கேள்விக்கு, “சிலர் மாஸ்க் போடுவது இல்லை. கேட்டால், நாங்களெல்லாம் தேக்கு என்று சொல்கிறார்கள். இந்த கொரோனா தேக்கை எல்லாம் அப்படியே அரித்துவிடும் என்று சொல்ல வேண்டியுள்ளது என்று கூறினார் வடிவேலு.

இந்நிலையில், நடிகர் வடிவேலுவுடன் நமது செய்தியாளர் பாண்டியராஜ் நடத்திய உரையாடலின்போது, “ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் உலகமே உற்றுப் பார்க்கக் கூடிய வகையில் கொரோனாவை கட்டுப்படுத்தி இருக்கிறது இந்த ஆட்சி. மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் பல்வேறு திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது மக்களுக்கு மிகவும் அருமையான விஷயங்களை செய்து வருகிறது இரவு பகல் பார்க்காமல் முதலமைச்சர் வேலை பார்த்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு அருமையாக இருக்கிறது, அழகாக இருக்கிறது.

Must Read : பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா? - அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்

எதிர்க் கட்சிகள் உள்பட அனைத்துக் கட்சிகளும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டி தீர்மானம் எல்லாம் நிறைவேற்றி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: