ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Exclusive | 'நான் பாஜகவில் சேரப்போகிறேன் என்பது இறந்து புதைந்த செய்தி' - வடிவேலு..

Exclusive | 'நான் பாஜகவில் சேரப்போகிறேன் என்பது இறந்து புதைந்த செய்தி' - வடிவேலு..

நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு

நடிகை வனிதா விஜயகுமார் உள்ளிட்ட இன்னும் பல திரைப்பிரபலங்கள் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

நான் பாஜகவில் சேரப் போகிறேன் என்பது இறந்து புதைந்த செய்தி  என்று நடிகர் வடிவேலு நியூஸ் 18 தமிழ்நாடு செய்திக்கு பிரத்யேகமாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அனைத்துக் கட்சிகளும் தங்கள் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. அதேபோல பாஜகவும்  தன் கட்சியில் பல உறுப்பினர்களையும் பல பிரபலங்களையும் சேர்த்து வருகிறது.

சமீபத்தில் நடிகை குஷ்பு, மோகன் வைத்தியா உள்ளிட்டோர் அக்கட்சியில் இணைந்தனர். இதுபோல நடிகர் வடிவேலுவும் பாஜகவில் இணைய போவதாக பல நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் கசிந்த வண்ணம் உள்ளன.

Also read... Gold Rate | தங்கம் விலை அதிரடி உயர்வு.. இன்றைய விலை நிலவரம் என்ன?

இதுகுறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக விளக்கம் அளித்துள்ள நடிகர் வடிவேலு, நான் பாஜகவில் இணையப் போவதாக வரும் செய்தி இறந்து புதைந்த ஒன்று என்று அவரது பாணியில் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நடிகை வனிதா விஜயகுமார் உள்ளிட்ட இன்னும் பல திரைப்பிரபலங்கள் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vadivelu, BJP, Comedy king vadivelu