பிரபல OTT தளத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக ரசிகர்களை குஷிப்படுத்த போகும் நடிகர் வடிவேலு!

நடிகர் வடிவேலு

சந்தர்ப்ப சூழல் காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சரியான திரைப்பட வாய்ப்புகள் அமையாவிட்டாலும், இன்றும் நம்மை கலகலப்பாக வைத்திருக்கும் ஒரு மந்திரம், வடிவேலுவின் காமெடி சீன்கள் மட்டுமல்ல அவரது வசனம் மற்றும் அதை வித்தியாசமாக வெளிப்படுத்திய அவரது உச்சரிப்புகளும் தான்.

  • Share this:
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்கள் நாகேஷ், கவுண்டமணி- செந்திலுக்கு பிறகு தவிர்க்க முடியாத உச்ச காமெடி ஸ்டாராக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளவர் வைகை புயல் என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் வடிவேலு. தமிழ் ரசிகர்களுக்கு சென்டிமென்ட் எந்தளவிற்கு முக்கியமோ அதை விட ஒருபடி மேலாக இருப்பது நகைச்சுவை. எனவே தமிழ் சினிமாவில் பெரியளவில் ஹிட்டாகும் திரைப்படங்களில் கூட திரைக்கதை அல்லது ஹீரோக்களின் பங்கிற்கு சமமாக அல்லது அதை விட அதிகமாக நகைச்சுவை நடிகர்களின் பங்கு இருந்து வருகிறது.

தனது தனித்திறமையால் அடிமட்டத்திலிருந்து காமெடி கிங்காக உச்சத்திற்கு சென்றவர் நடிகர் வடிவேலு. இவரது ஃபேஸ் ரியாக்ஷன் மற்றும் பாடி லாங்குவேஜிற்கு இணை வேறு யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு காமெடி நடிப்பில் கொடிகட்டி பறந்தவர் வடிவேலு. சிறு குழந்தைகள் முதல் பல் போன முதியவர்கள் வரை இவரது காமெடியை ரசித்து சிரிக்காதவர்களே இருக்க முடியாது. மிகவும் ஒல்லியான தேகத்தில் சினிமாவில் அறிமுகமான இவர் துவக்க காலத்தில் என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் கவுண்டமணி - செந்தில் ஜோடியுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் பிறகு கமலுடன் இணைந்து தேவர்மகன் மற்றும் சிங்காரவேலன் உள்ளிட்டவற்றில் நடித்தார். முதன் முதலாக வடிவேலு சோலோவாக கலக்கியது 1994-ல் பிரபு தேவாவுடன் இணைந்து நடித்த காதலன் படத்தில் தான். அதன் பிறகு காதல் தேசம், காலம் மாறிப்போச்சு, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் மிகவும் நகைச்சுவையாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனிஇடம் பிடித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், பிரசாந்த் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களின் படத்திலும் காமெடி டிராக்கில் கலக்கி நம் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார் வடிவேலு.

சந்தர்ப்ப சூழல் காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சரியான திரைப்பட வாய்ப்புகள் அமையாவிட்டாலும், இன்றும் நம்மை கலகலப்பாக வைத்திருக்கும் ஒரு மந்திரம், வடிவேலுவின் காமெடி சீன்கள் மட்டுமல்ல அவரது வசனம் மற்றும் அதை வித்தியாசமாக வெளிப்படுத்திய அவரது உச்சரிப்புகளும் தான். நல்ல ஃபார்மில் வடிவேலுவை பார்க்க நீண்ட வருடங்களாக ஆசையாக இருக்கும் ரசிகர்கள் எதிர்பார்த்த இம்சை அரசன் 24-ம் புலிகேசி திரைப்படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் இன்னும் தீரவில்லை.

Also read... சார்பட்டா பரம்பரை படக்குழுவை பாராட்டிய கமல்...!

இதனிடையே நடிகர் வடிவேலு வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க போவதாக தகவல் வெளியானது. இது குறித்த அப்டேட் எதுவும் அதன் பிறகு வரவில்லை. இந்நிலையில் தெலுங்கில் பிரபலமாக இருக்கும் OTT தளம் ஆஹா. இந்நிறுவனம் விரைவில் தமிழகத்தில் பிரான்ச் ஓபன் செய்ய உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கை போலவே தமிழிலும் பல்வேறு இன்டர்நெட் நிகழ்ச்சிகளை துவக்க பல்வேறு தமிழ் திரை பிரபலங்களை ஆஹா நிறுவனம் அணுகி உள்ளது. அந்த வகையில் நடிகர் வடிவேலுவிடம் தங்கள் OTTக்காக காமெடி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க கோரி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது ஆஹா நிறுவனம். இறுதியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் வடிவேலு சம்மதம் தெரிவித்து சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வடிவேலுவை எந்த வகையிலாவது மீண்டும் ஸ்கிரீனில் பார்த்து விட மாட்டோமா என்று ஏங்கும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு இந்த தகவல் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: