ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Actor Vadivelu : நடிகர் வடிவேலு முதலமைச்சரை சந்தித்து ரூ. 5 லட்சம் நிதி வழங்கினார்

Actor Vadivelu : நடிகர் வடிவேலு முதலமைச்சரை சந்தித்து ரூ. 5 லட்சம் நிதி வழங்கினார்

நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு

மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் உலகமே உற்றுப் பார்க்கும் அளவில் கொரோனா கட்டுப்படுத்தி உள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து நடிகர் வடிவேலு முதலமச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கினார்.

  அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வடிவேலு, “முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்ததுமிக மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக எளிமையாக இருக்கிறார் குடும்பத்தில் ஒரு நபராக நினைத்து முதலமைச்சர் என்னிடம் பேசினார். அவரை சந்தித்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்தேன்” என்று கூறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும், மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் உலகமே உற்றுப் பார்க்கும் அளவில் கொரோனா கட்டுப்படுத்தி உள்ளார். தமிழக முதலமைச்சரே தெருத்தெருவாகச் சென்று மக்கள் தடுப்பூசி போட முகாம் அமைத்து வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கெஞ்சிக் கேட்டு, மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ளச் செய்துள்ளார்.

  Read More : சிறப்பு ஒதுக்கீடாக தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி வழங்க பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யார் மனதையும் புண்படுத்தாமல் ஒவ்வொரு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். தமிழக மக்களுக்கு பொற்கால ஆட்சியை அமைத்துக் கொடுத்துள்ளார். பெண்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார் என்று கூறினார். தொடர்ந்து பேசிய வடிவேலு, தான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

  Must Read : ஒரே மாதத்தில் உலத்தையே உற்றுப் பார்க்க வைத்துள்ளார் மு.க.ஸ்டாலின் - நடிகர் வடிவேலு

  அப்போது மீண்டும் பழையபடி அதிக படங்களில் உங்களைப் பார்க்கலாமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “கண்டிப்பாக நல்லதே நடக்கும்” என்று கூறினார். பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் போடுகிறார்களா என்ற கேள்விக்கு, “சிலர் மாஸ்க் போடுவது இல்லை. கேட்டால், நாங்களெல்லாம் தேக்கு என்று சொல்கிறார்கள். இந்த கொரோனா தேக்கை எல்லாம் அப்படியே அரித்துவிடும் என்று சொல்ல வேண்டியுள்ளது என்று நகைச்சுவையாகக் கூறினார் நடிகர் வடிவேலு.

  Published by:Suresh V
  First published:

  Tags: Actor Vadivelu, CoronaVirus, MK Stalin