ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பெரிய சம்பளத்துடன் வெப் சீரிஸில் ரீ எண்ட்ரி ஆகும் வடிவேலு?

பெரிய சம்பளத்துடன் வெப் சீரிஸில் ரீ எண்ட்ரி ஆகும் வடிவேலு?

நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு விரைவில் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நடிகர் வடிவேலு விரைவில் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான வடிவேலுவுக்கு ரசிகர்கள் ஏராளம். கடைசியாக 2017-ம் ஆண்டு மெர்சல் படத்தில் நடித்திருந்த அவர், தற்போது கமல்ஹாசனுடன் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

  இதனிடையே இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் ஷங்கர் உடன் ஏற்பட்ட பிரச்னையால் அந்தப் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்தார் வடிவேலு. அதனால் அவர் மீது நடிகர் சங்கத்தில் ஷங்கர் தரப்பு புகாரளித்தது. அதையடுத்து அவரை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று நடிகர் சங்கம் தடைவிதித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

  இந்நிலையில், ஓடிடி தளங்களில் வெப் சீரிஸில் வடிவேலுவை நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதற்காக முன்னணி ஓடிடி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பதாகவும், வடிவேலுக்கு பெரிய தொகையை சம்பளமாக கொடுக்க அந்நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  வடிவேலுவுடன் பல படங்களில் பணியாற்றிய இயக்குநர் ஒருவர் இந்த நகைச்சுவைத் தொடரை இயக்க உள்ளதாகவும், கொரோனா ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்ட பின்னர் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

  மேலும் படிக்க: பா.ரஞ்சித் படத்தில் ஹீரோவாக நடிக்கும் யோகி பாபு?


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Actor Vadivelu