• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நடிகர் சிங்கமுத்து மீதான நிலமோசடி வழக்கு: வடிவேலு ஆஜராகாததால் ஒத்திவைப்பு!

நடிகர் சிங்கமுத்து மீதான நிலமோசடி வழக்கு: வடிவேலு ஆஜராகாததால் ஒத்திவைப்பு!

வடிவேலு

வடிவேலு

நடிகர் சிங்கமுத்து, சேகர் என்பவரோடு சேர்ந்து தன்னை மோசடி செய்துள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் நடிகர் வடிவேலு புகார் அளித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

  • Share this:
    நடிகர் சிங்கமுத்து மீது நில மோசடி தொடர்பான வழக்கில் குறுக்கு விசாரணைக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு இன்று ஆஜராகததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.  டிசம்பர் 7ம் தேதி குறுக்கு விசாரணைக்கு நடிகர் வடிவேலு ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கடந்த 2007ஆம் ஆண்டு சபரி முத்து என்பவரிடமிருந்து நடிகர் சிங்கமுத்து கூறியதன் அடிப்படையில் தாம்பரம் பெருங்களத்தூர் பகுதியில் 3 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை  நடிகர் வடிவேலு வாங்கியுள்ளார். நடிகர் வடிவேலு வாங்கிய இடத்தில் கழிவுநீர் பண்ணை வருவதால், அரசாங்கம் நிலம் கையகப்படுத்த உள்ளதாக கூறி நடிகர் சிங்கமுத்து இந்த நிலத்தை விற்பனை செய்ய வேண்டும் என கூறியதாக நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

    அதற்காக நடிகர் சிங்கமுத்து தெரிவித்ததன் அடிப்படையில், அசோக்நகர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் தாம்பரத்தைச் சேர்ந்த சேகர் என்பவருக்கு பொது அதிகார பத்திரம் நடிகர் வடிவேலு எழுதிக் கொடுத்துள்ளார். இந்த நிலம் பார்க்கவ் பவுண்டேஷன் என்ற நிறுவனத்திற்கு 20 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறி, நடிகர் சிங்கமுத்து பணத்தை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு வருமான வரி தணிக்கை செய்ய வந்தபோது, தாம்பரம் பெருங்களத்தூரில் வாங்கிய நிலத்தை ஒரு கோடியே 93 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாகவும் அது தொடர்பாக வரி செலுத்தப்படவில்லை என அதிகாரிகள் காட்டியுள்ளனர். இதையடுத்து நடிகர் சிங்கமுத்து, சேகர் என்ற ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நபரோடு சேர்ந்து தன்னை மோசடி செய்துள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் நடிகர் வடிவேலு புகார் அளித்திருந்தார்.

    இதையும் படிங்க: ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு!


    இந்த புகாரின் அடிப்படையில் நடிகர் சிங்கமுத்து மற்றும் சேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இதனடிப்படையில் எழும்பூர் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. குறுக்கு விசாரணையில் நடிகர் வடிவேலு வருமான வரி ஏய்ப்பு செய்வதற்காக வேண்டுமென்றே தங்கள் மீது பழி போடுவதாக நடிகர் சிங்கமுத்து மற்றும் சேகர் ஆகியோர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்கமுத்து


    இகுறுக்கு விசாரணை தொடர்பாக இன்று 14ஆவது மத்திய குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நடிகர் வடிவேலுக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நடிகர் வடிவேலு ஆஜராகவில்லை. இதனையடுத்து வழக்கை டிசம்பர் 7ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அன்றைய தினம் நடிகர் வடிவேலு குறுக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: