முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / எனக்கு என்ட் கார்டே இல்ல...! ஷங்கரை வெளுத்து வாங்கிய வடிவேலு

எனக்கு என்ட் கார்டே இல்ல...! ஷங்கரை வெளுத்து வாங்கிய வடிவேலு

நடிகர் வடிவேலு மற்றும் இயக்குனர் சங்கர்.

நடிகர் வடிவேலு மற்றும் இயக்குனர் சங்கர்.

24-ம் புலிகேசி படம் குறித்து பேசிய வடிவேலு அந்த படத்தை இயக்குவது சிம்புதேவனா அல்லது ஷங்கரா? என தெரியவில்லை என்றும் கூறினார்.

  • Last Updated :

அவர் ஒரு கிராபிக்ஸ் டைரக்டர் என இயக்குனர் ஷங்கரை நடிகர் வடிவேலு விமர்சித்துள்ளார்.

பிரெண்ட்ஸ் படத்தின் நகைச்சுவை காட்சி 19 ஆண்டுகள் கழித்து Pray_for_Neasamani என்னும் ஹேஷ்டேக் மூலம் உலகளவில் ட்ரெண்டாகி வந்தது.

'Civil Engineering Learners' என்ற முகநூல் பக்கத்தில் சுத்தியலின் படம் ஒன்றை போட்டு, இதனை உங்கள் ஊரில் என்னவென்று அழைப்பார்கள் என கேட்க, விக்னேஷ் என்பவர், `இதன் பெயர் சுத்தியல், பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணி தலையை இந்த சுத்தியல்தான் பதம் பார்த்தது என கோக்குமாக்காக கமெண்ட் இட, Pray_for_Neasamani ஹேஷ்டேக் உருவானது.

இந்த ஹேஷ்டேக் இந்தியா முழுவதும் ட்ரெண்ட் ஆனது. பலரும் நேசமணி உடல் நலம் தேறி வர வேண்டும் என்று இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்ரெண்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் வடிவேலுவிடம் தனியார் ஊடகம் ஒன்று எடுத்த பேட்டியில் நேசமணி ட்ரெண்டானது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து  24-ம் புலிகேசி படம் குறித்து பேசிய வடிவேலு அந்த படத்தை சிம்புதேவன் இயக்குகிறாரா அல்லது சங்கரா என தெரியவில்லை. சங்கர் ஒரு கிராபிக்ஸ் டைரக்டர். காமெடி படம் குறித்து அவர் பேசுவது எந்த விதத்தில் நியாயம்?  என்றும் வடிவேலு தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படத்தில் வடிவேலுவின் உண்மையான நடிப்பை அவர்கள் எதிர்பர்க்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய வடிவேலு, ”இவர்கள் என்னை நடிக்க விடவில்லை என்றாலும் எனக்கு என்ட் கார்டே கிடையாது என் ரசிகர்கள் இருக்கும் வரைக்கும்...” என்றும் தெரிவித்தார்.

Also see...

top videos

    First published:

    Tags: Actor Vadivelu