‘வைரஸாக வந்து பாடம் புகட்டிவிட்டாய்’... வடிவேலுவின் உருக்கமான கொரோனா பாடல்!
‘வைரஸாக வந்து பாடம் புகட்டிவிட்டாய்’... வடிவேலுவின் உருக்கமான கொரோனா பாடல்!
நடிகர் வடிவேலு
“காடுகளை அழித்தோம். மண் வளம் கெடுத்தோம். நீர்வளம் ஒழித்தோம். நம் வாழ்க்கை தொலைத்தோம். வைரஸாய் வந்து நீ பாடம் புகட்டிவிட்டாய். இயற்கையை மதிக்கிறோம். இத்தோடு விட்டு விடுகின்றோம்.”
நடிகர் வடிவேலு கொரோனா வைரஸ் பற்றி பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
திரைப்பட படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டிருப்பதால் நடிகர்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்தபடி விழிப்புணர்வு, சமையல் குறிப்பு, உடற்பயிற்சி செய்வது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆரம்பத்தில் கொரோனா விழிப்புணர்வு குறித்து வீடியோ வெளியிட்டிருந்த வடிவேலு, தற்போது உருக்கமான பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
அதில், “காடுகளை அழித்தோம். மண் வளம் கெடுத்தோம். நீர்வளம் ஒழித்தோம். நம் வாழ்க்கை தொலைத்தோம். வைரஸாய் வந்து நீ பாடம் புகட்டிவிட்டாய். இயற்கையை மதிக்கிறோம். இத்தோடு விட்டு விடுகின்றோம்.” என்ற வரிகள் மட்டும் இடம்பெற்றுள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.