திரையுலகில் தனக்கு என தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ள நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மகள் கலைவாணியின் திருமணம் மதுரையில் எளிமையாக நடைபெற்றது.
மதுரை ஐராவதநல்லூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு சினிமா துறையை சார்ந்தவர்கள் முன்னனி நடிகர்கள் யாருக்கும் வழக்கம் போல அழைப்பு விடுக்கப்படவில்லை. திரையுலகத்தைச் சேர்ந்த வடிவேலுவின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே திருமண விழாவில் பங்கேற்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற தனது மகனின் திருமணத்திற்கு கூட வடிவேலு எந்த பிரபலத்தையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் அழைக்கவில்லை. நடிகர் வடிவேலு மகனின் திருமணம் என்பதே, அந்த மண்டப உரிமையாளருக்கு காலையில் வடிவேலு திருமணத்திற்கு வந்தபோது தான் தெரிந்துள்ளது. அவ்வளவு ரகசியமாக வைக்கப்பட்டதாம் தகவல்கள்.
பூச்சி முருகன் மற்றும் அவரது மனைவியுடன் வடிவேலுவின் குடும்பத்தினர்
பொதுவாக விளம்பரம் தேடுவதை விரும்பாத வடிவேலு தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமான எந்த தகவல்களையும் வெளியிட்டதில்லை. குறிப்பாக மனைவி, மகன், மகள் உள்ளிட்டோரின் புகைப்படங்களே பல ஆண்டுகளுக்கு பின் தான் வெளிச்சத்திற்கு வந்தது. அதுவும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தான் அந்த படங்கள் வெளியானதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற வடிவேலுவின் மகளின் திருமணத்தை தொடர்ந்து வடிவேலுவின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.
Published by:SPDakshina Murthy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.