• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • "அறியாமையில் புலம்பும் கலைஞானி கமல்" படம் போட்டு பதில் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்

"அறியாமையில் புலம்பும் கலைஞானி கமல்" படம் போட்டு பதில் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

கடந்த 25 ஆண்டுகளாக கிராமசபைக் கூட்டத்தை கூட்டாமல் நான் கிராமசபை கூட்டத்தைக் கூட்டத் தொடங்கியதும் என்னைப் பார்த்து திமுகவினர் காப்பியடிக்கின்றனர் - கமல்ஹாசன்

  • News18
  • Last Updated :
  • Share this:
    தி.மு.கவை விமர்சித்த கமல்ஹாசனுக்கு பதிலளித்த நடிகர் உதயநிதி ஸ்டாலின் அறியாமையில் புலம்புவதாக தெரிவித்துள்ளார்.

    சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், “கடந்த 25 ஆண்டுகளாக கிராமசபைக் கூட்டத்தை கூட்டாமல் நான் கிராமசபை கூட்டத்தைக் கூட்டத் தொடங்கியதும் என்னைப் பார்த்து திமுகவினர் காப்பியடிக்கின்றனர். நான் சட்டசபையில் சட்டைய பிச்சிக்கிட்டு நிக்கமாட்டேன்.

    அப்படி கிழிஞ்சு போனாலும் வேற சட்ட மாத்திக்கிட்டு வெளில வருவேன். புது ஷீவை மாட்டிக்கொண்டு கூட்டணி எனும் கருப்பு குட்டைக்குள் இறங்கி அழுக்காக்கிக் கொள்ளமாட்டேன். தி.மு.கவை விமர்சிக்க தி.மு.கவே காரணம். மறைமுகமாக அல்ல நேரடியாகவே விமர்சிக்கிறேன்”என்றார்.

    இந்தநிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நடிகரும், மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், “கமல்ஹாசன் அறியாமையில் பேசுகிறார்.

    கிராமசபைக் கூட்டங்களை திமுக காப்பியடிக்கவில்லை. அவரது விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

    தற்போது ட்விட்டரில் இதற்கு விளக்கமளித்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2015-ம் ஆண்டே திமுக கிராமசபைக் கூட்டங்களை நடத்தியதாக புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.

    மேலும் அந்த பதிவில், “கிராம சபைக் கூட்டத்தை நான் தான் கண்டு பிடிச்சேன் என்று அறியாமையில் புலம்பும் கலைஞானி கமல் சாருக்கு இந்தப் படங்கள் சமர்ப்பணம்” என்று கூறியுள்ளார்.



    காதலியை பார்க்க சென்ற பிரபல நடிகர், வீடு திரும்பாததால் விபரீதம் - வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: