புற்றுநோயால் அவதிப்படும் நடிகர் தவசி - உதவி கேட்டு உருக்கமான கோரிக்கை

புற்றுநோயால் அவதிப்படும் நடிகர் தவசி - உதவி கேட்டு உருக்கமான கோரிக்கை

நடிகர் தவசி

தவசி தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது புதிய புகைப்படம் வெளியாகி ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

  • Share this:
நடிகர் தவசி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போயிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் பரோட்டா சூரிக்கு அப்பாவாக நடித்தவர் தவசி. பெரிய தாடி, முறுக்கு மீசையுடன் கரத்த குரலில் ‘கருப்பன் குசும்புக்காரன்’ என்று இவர் பேசிய வசனம் மிகவும் பிரபலம். கிழக்குச் சீமையிலே படத்திலிருந்து ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ வரை ஏராளமான படங்களில் குணச்சித்திர மற்றும் துணை நடிகராக நடித்து அசத்தியிருக்கிறார் தவசி.

கடந்த ஆண்டு கோம்பை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் நடைபெற்ற வரும் ராசாத்தி என்ற சின்னத்திரை நெடுந்தொடர் படப்பிடிப்பில் கலந்து கொண்ட தவசி திண்டுக்கல்லில் இருந்து தேனியில் உள்ள தனியார் விடுதிக்கு செல்லும் வழியில் கார் விபத்தில் சிக்கினார்.

அதிலிருந்து தப்பித்த தவசி தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது புதிய புகைப்படம் வெளியாகி ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதில் மொட்டை அடித்து மெலிந்த உடலுடன் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போயிருக்கிறார் தவசி.

மேலும் தனது மருத்துவ செலவுக்கு நடிகர்களும் பொதுமக்களும் உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். அவரது மகன் ஆறுமுகமும் தனது தந்தையை நோயிலிருந்து குணப்படுத்த உதவுமாறு பல்வேறு திரைபிரபலங்களிடம் கோரிக்கை வைத்து வருகிறார்.

மேலும் படிக்க: கமல்ஹாசனை குறை கூறிய அனிதா சம்பத் - கடுப்பான ரசிகர்கள்

சிவகார்த்திகேயன் படத்தில் நடித்திருப்பதால் தவசியின் கோரிக்கையை பலரும் அவருக்கு ட்விட்டரில் டேக் செய்து வருகின்றனர்.நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்
Published by:Sheik Hanifah
First published: