Home /News /entertainment /

விஜய் ‘நோ’ சொன்ன கதைக்கு ’ஓகே’...சசிகுமாருடன் இணையும் சூர்யா?

விஜய் ‘நோ’ சொன்ன கதைக்கு ’ஓகே’...சசிகுமாருடன் இணையும் சூர்யா?

சசிகுமார், சூர்யா

சசிகுமார், சூர்யா

சுப்பிரமணியபுரம் என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த சசிகுமார் அதன்பின் ஈசன் படத்தை இயக்கினார். 2010-ம் ஆண்டுக்குப் பின் அவரது இயக்கத்தில் வேறெந்தப் படமும் வெளியாகவில்லை.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    நடிகரும் இயக்குநருமான சசிகுமார் இயக்கும் புதிய படத்தில்  சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே மற்றும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் சசிகுமார் ரஜினிகாந்துடன் நடித்த பேட்ட படம் ஜனவரி 10-ம் தேதி ரிலீசாக இருக்கிறது. நடிகர் சூர்யா தற்போது கையில் வைத்திருக்கும் இரண்டு படங்களை முடித்த பின் சசிகுமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    சுப்பிரமணியபுரம் என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த சசிகுமார் அதன்பின் ஈசன் படத்தை இயக்கினார். 2010-ம் ஆண்டுக்குப் பின் அவரது இயக்கத்தில் வேறெந்தப் படமும் வெளியாகவில்லை. நடிப்பிலும், தயாரிப்பிலும் கவனம் செலுத்திவரும் அவர் எப்போது அடுத்தப் படத்தை இயக்குவார் என்ற எதிர்ப்பார்ப்பு திரைத்துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் நிலவி வருகிறது.

    இருப்பினும் அவ்வப்போது சசிகுமார் படம் இயக்குவதாக தகவல் வெளியாவதும், அதற்கு அவர் மறுப்பு தெரிவிப்பதும் தொடர்ந்து வருகிறது. தற்போது சூர்யாவை கதாநாயகனாகக் கொண்டு அவர் புதிய படத்தை இயக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. சூர்யாவிடம் சசிகுமார் கூறிய கதை அவருக்குப் பிடித்துப்போக உடனே சம்மதித்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

    முன்னதாக நடிகர் விஜய்க்கு சசிகுமார் கதை சொன்னதாகவும் அதை அப்போது  அவர் மறுத்ததால் தற்போது நடிகர் சூர்யாவை நாயகனாக வைத்து இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த கதை வரலாற்று கதையாக அமைந்திருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    பேட்ட படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில் தனுஷ் நடித்துள்ள  ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திலும் சசிகுமார் நடித்துள்ளார். இவை தவிர நாடோடிகள் 2, கொம்பு வச்ச சிங்கம்டா, கென்னடி கிளப் ஆகிய படங்கள் அவர் கைவசம் உள்ளன. எனவே அவர் நடிப்பில் இந்த ஆண்டு பல படங்கள் வெளியாக உள்ளன.

    பேருந்து மோதி 7 வயது சிறுவன் உயிரிழப்பு - வீடியோ

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actor Sasikumar, Actor Surya

    அடுத்த செய்தி