Home /News /entertainment /

‘நம்ம வீட்டு பொண்ணு’ சீரியல் பற்றி அடுத்தடுத்த அப்டேட்டை வெளியிடும் சுர்ஜித்குமார்..

‘நம்ம வீட்டு பொண்ணு’ சீரியல் பற்றி அடுத்தடுத்த அப்டேட்டை வெளியிடும் சுர்ஜித்குமார்..

 ‘நம்ம வீட்டு பொண்ணு’ சீரியல்

‘நம்ம வீட்டு பொண்ணு’ சீரியல்

சீரியல் பிரியர்களை கட்டிப்போட்டு வைத்துள்ள விஜய் டிவி சீரியல்கள் பட்டியலில் தற்போது’நம்ம வீட்டு பொண்ணு’ சீரியலும் இணைந்துள்ளது.இந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் சுர்ஜித் தனது இன்ஸ்டாகிராமில் சீரியல் பற்றிய அப்டேட்டை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

மேலும் படிக்கவும் ...
எண்ணற்ற ஹிட் சீரியல்கள் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளது ஸ்டார் விஜய் சேனல். விரைவில் பல புது சீரியல்களை ஒளிபரப்ப உள்ளது. விஜய் டிவயின் ஆஸ்தான சீரியல் டைரக்டராக வலம் வருபவர் பிரவீன் பென்னட். முதன் முதலாக கனா காணும் காலங்கள் சீரியலில் பணியாற்றிய இவர், இர்பான் - ரச்சிதா,கவின் உள்ளிட்டோர் நடித்த சரவணன் மீனாட்சி 2 சீரியல் மூலம் டைரக்டராக அறிமுகமானார். இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததை தொடர்ந்து, அடுத்தடுத்து சீரியல்களை இயக்கும் வாய்ப்பை விஜய் டிவி நிர்வாகம் தொடர்ந்து அளித்தது.

இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட பிரவீன் பென்னட், ஆல்யா மானசா - சஞ்சீவ் இணைந்து நடித்த ராஜா ராணி, பாரதி கண்ணம்மா,பொம்முக்குட்டி அம்மாவுக்கு,ராஜா ராணி 2 உள்ளிட்ட ஹிட் சீரியல்களை டைரக்ட் செய்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இவர் இயக்கும் சீரியல்கள் விஜய் டிவி-யின் டிஆர்பி ரேட்டிங் எகிற காரணமாக இருப்பதால் தற்போது சேனலின் ஆஸ்தான டைரக்டராக வலம் வந்து கொண்டிருக்கிறார் பிரவீன் பென்னட்.

 இதனிடையே பிரவீன் பென்னட் இயக்கத்தில் விரைவில் ஸ்டார் விஜய் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது "நம்ம வீட்டு பொண்ணு" சீரியல். இதனிடையே ஸ்டார் விஜய் சேனலில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள நம்ம வீட்டு பொண்ணு சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார் நடிகர் சுர்ஜித் குமார். இது தொடர்பான அப்டேட் குறித்து சுர்ஜித் குமார், தனது சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து உள்ளார்.

Photos : தமன்னாவின் இந்த புகைப்படத்தை பார்த்து ‘வாவ்’ சொன்ன சமந்தா..புதிய சீரியலான நம்ம வீட்டு பொண்ணு-வில் கார்த்திக் என்ற கேரக்டரில் நடிகர் சுர்ஜித் குமார் நடிக்கிறார். சுர்ஜித் குமார் தவிர "நம்ம வீட்டு பொண்ணு" சீரியலில் ராஜா ராணி சீரியலில் வடிவு கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஷப்னம், நடிகை அஷ்வினி ஆனந்திதா, அருணிமா சுதாகர், அம்ருதா, நித்தியா ரவிந்தர், வைஷாலி தணிகா, சந்தியா விஜே மற்றும் பலர் இடம் பெற்றுள்ளனர். முக்கியமாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் பிரபல சீரியல் நடிகர் வெங்கட் நம்ம வீட்டு பொண்ணு மூலம் மீண்டும் சின்னத்திரையில் தோன்ற உள்ளார்.Photos : அனன்யா பாண்டேவின் கவர்ச்சியான போட்டோ ஷூட்..

நம்ம வீட்டு பொண்ணு சீரியல் தொடர்பான ப்ரமோ வீடியோவில், கதையின்படி நடிகர் சுர்ஜித் குமார், அஷ்வினி ஆனந்திதாவை ஒரு குடும்ப நிகழ்வில் சந்திக்கிறார். மொபைலை பார்த்து கொண்டே எதிரே வரும் சுர்ஜித்தை அவர் இடித்து விடுகிறார். இதனால் சுட சுட சாம்பாரை எடுத்து சென்ற சுர்ஜித் மீது சிறிதளவு சாம்பார் கொட்டி விடுகிறது. இதனால் கோபம் கொள்ளும் சுர்ஜித், குழந்தைகள் மீது கொட்டி இருந்தால் என்ன ஆவது என்று கேட்டு அஷ்வினியை கடிந்து கொள்கிறார். இருவரும் அருகருகே நிற்பதை தூரத்திலிருந்து பார்க்கும் சில உறவினர்கள் இருவரின் ஜோடி பொருத்தமும் பிரமாதம் என்று தங்களுக்குள் பேசி கொள்கின்றனர். ஆனால் அஷ்வினியோ இப்படிப்பட்ட கோப குணம் கொண்ட ஒருவனை தவறியும் திருமணம் செய்து விட கூடாது என்று அருகே இருக்கும் தோழியிடம் தன் மனதில் தோன்றியதை ஷேர் செய்கிறார். இவர்களுக்குள் நடக்கும் மோதல், திருமணம் உள்ளிட்டவற்றை சுற்றி நம்ம வீட்டு பொண்ணு சீரியலின் கதை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
View this post on Instagram

 

A post shared by S U R J I T H S (@actorsurjithkumar)

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சுர்ஜித், நம்ம வீட்டு பொண்ணு சீரியல் தொகுப்புகளிலிருந்து படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது ஷேர் செய்து வருகிறார்.கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான உயிரே சீரியலில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Vijay tv

அடுத்த செய்தி