தேசிய அளவிலான கராத்தே போட்டியில் நடிகர் சூர்யாவின் மகன் தேவ் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிகை ஜோதிகாவை காதலித்து மணமுடித்தார். இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். பெற்றோர் திரைத்துறையில் நட்சத்திரங்களாக ஜொலித்தாலும் குழந்தைகள் இதுவரை படங்களில் நடித்ததில்லை.
பள்ளிப்படிப்பை பயின்று வரும் தியா விளையாட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். டென்னிஸ், கால்பந்து விளையாட்டுகளில் கவனம் செலுத்தி வரும் தியா, கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார். ஏற்கெனவே மாநில அளவிலான ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற தியா, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் கைகளில் கோப்பையை வாங்கியுள்ளார்.
இந்நிலையில் தேசிய அளவிலான ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் கலந்து கொண்ட சூர்யாவின் மகன் தேவ் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்திலிருந்து இஷ்ரின்யூ முறையில் பயின்ற 40 பேர் இந்த போட்டியில் கலந்துகொண்டனர். பல்வேறு பிரிவுகளில் போட்டிகளில் நடத்தப்பட்டது. அதில் தண்டர்கேக் பிரிவில் கலந்துகொண்ட தேவ் வெற்றி பெற்றுள்ளார். தனது மகன் கலந்துகொள்ளும் இந்த போட்டியைக் காண சூர்யா, ஜோதிகா இருவரும் சென்றிருந்தனர்.
சமந்தா பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோ: நீதானே என் பொன்வசந்தம்...!
சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.