Home /News /entertainment /

சூர்யாவின் என்.ஜி.கே ரிலீஸ் தேதி அறிவிப்பு - ரசிகர்கள் மகிழ்ச்சி

சூர்யாவின் என்.ஜி.கே ரிலீஸ் தேதி அறிவிப்பு - ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

கடந்த ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து பிப்ரவரி மாதத்தில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

  • News18
  • Last Updated :
    என்.ஜி.கே படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அப்படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.

    இயக்குநர் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகும் படம் என்.ஜி.கே. இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.

    நந்த கோபாலன் குமரன் (சுருக்கமாக என்.ஜி.கே.) என்ற இப்படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் படம் 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

    ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதனால் படத்தை ரிலீஸ் செய்வது தாமதமானது. சூர்யா - செல்வராகவன் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்திருந்தது.



    கடந்த ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து பிப்ரவரி மாதத்தில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.



    இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். அதற்கு விடை சொல்லும் விதமாக என்.ஜி.கே மே மாதம் 31-ம் தேதி திரைக்கு வரும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



    இதன்மூலம் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு விடை கிடைத்துள்ளது.

    நயன்தாராவை பற்றி தவறாக பேசவில்லை - ராதாரவி விளக்கம்

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actor Surya, NGK Release date

    அடுத்த செய்தி