Home /News /entertainment /

இவன் காப்பான்... ரசிகர்களுக்கு ஹின்ட் கொடுத்த சூர்யா

இவன் காப்பான்... ரசிகர்களுக்கு ஹின்ட் கொடுத்த சூர்யா

2019 சிறப்பான ஆண்டாக அனைவருக்கும் அமையட்டும், “தி பெஸ்ட் இஸ் யெட் டூ கம்” என்று சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
2019-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

அயன், மாற்றான் படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இயக்குநர் கே.வி.ஆனந்துடன் கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் சூர்யா. இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே (நந்த கோபால குமரன்), கே.வி.ஆனந்த் இயக்கும் படம் என பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் புத்தாண்டு தினத்தில் தனது ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் கே.வி.ஆனந்த நடிக்கும் படத்தின் டைட்டிலும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் சரியாக இன்று காலை 12.10 மணிக்கு வெளியானது. காப்பான் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சூர்யா, ஆர்யா, மோகன்லால் என நட்சத்திர படட்டாளமே இணைந்துள்ளது.

வித்தியாசமான ஹேர்ஸ்டைல், கோட் சூட், கையில் துப்பாக்கி என அசத்தலாக வெளியாகியுள்ளது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர். காப்பான் என்றால் காப்பவன், பாதுகாவலன் என்ற அர்த்தம் உள்ளதால் க்ரைம் த்ரில்லர் பாணியில் படம் உருவாகிவருவது போல் தெரிகிறது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், 2019 சிறப்பான ஆண்டாக அனைவருக்கும் அமையட்டும், “தி பெஸ்ட் இஸ் யெட் டூ கம்” என்று வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார்.

Published by:Prabhu Venkat
First published:

Tags: Actor Surya, Mohanlal Surya 37, NGK

அடுத்த செய்தி